உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கின் செல்வத்தை கட்டி காக்கும் இந்தியர் – யார் இந்த வைபவ் தனேஜா?

வாஷிங்டன், அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலன் மஸ்க். மின்சார கார், விண்வெளி தொழில்நுட்பம், சமூக ஊடகம் என பல துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார் எலான் மஸ்க். இவருடைய நிதியை கையாளும் பொறுப்பில் இருப்பவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பட்டய கணக்காளர். அதுமட்டுமின்றி எலான் மஸ்க் புதிதாக தொடங்கியுள்ள கட்சியின் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

யார் இந்த வைபவ் தனேஜா: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பட்டயக் கணக்காளர் வைபவ் தனேஜா தான் எலான் மாஸ்கின் செல்வத்தை கட்டி காப்பவர் என கூறலாம். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இவர் செயல்பட்டு வருகிறார் .இவருக்கு கூடுதலாக எலான் மஸ்க் தொடங்கி இருக்கக்கூடிய அமெரிக்க கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கின் செல்வத்தை கட்டி காக்கும் இந்தியர் – யார் இந்த வைபவ் தனேஜா?

எலான் மஸ்கின் நம்பிக்கை நாயகன்: எலான் மஸ்கின் அமெரிக்க கட்சியில் வைபவ் தனேஜா பொருளாளராகவும் ஆவண காப்பாளராகவும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கட்சிக்கு வரக்கூடிய நிதிகள் ,அதனை பிரித்து பட்ஜெட் போட்டு ஒதுக்கீடு செய்வது, நிதி சட்டங்களுக்கு உட்பட்டு கட்சி இயங்குவதை உறுதி செய்வது உள்ளிட்ட பொறுப்புகள் இவர் வசம் இருக்கின்றன. இதன் மூலம் கார்ப்பரேட் பைனான்ஸில் இருந்து அரசியல் தளத்தை நோக்கி வந்திருக்கிறார்.

அரசியல் கட்சி பொருளாளர்: எலான் மஸ்க் தன்னுடைய கனவு நிறுவனமான டெஸ்லாவின் நிதி மட்டுமின்றி அரசியல் கட்சியின் நிதியை கவனிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கியிருக்கிறார். இந்தியாவில் டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்தான் வைபவ் தனேஜா. 1999 ஆம் ஆண்டு காமர்ஸ் பிரிவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை முடித்தார். பின்னர் பட்டய கணக்காளராக தேர்ச்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் சர்டிபிகேட் பப்ளிக் அக்கவுண்டன்ட் என்ற சான்றிதழ் பெற்ற பொதுக்கணக்காளர் பட்டத்தை பெற்றார்.

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கின் செல்வத்தை கட்டி காக்கும் இந்தியர் – யார் இந்த வைபவ் தனேஜா?

டெல்லியில் பயின்றவர்: அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களுக்கும் நிதி சார்ந்த சேவைகளை இவர் வழங்கி வந்தார். PricewaterhouseCoopers என்ற நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். கிட்டதட்ட 17 ஆண்டுகள் அங்கே பணி புரிந்த அவர் பின்னர் சோலார் சிட்டி என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2017 ஆம் ஆண்டு தனேஜா டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார் .

1157 கோடி ரூபாய் சம்பளம்: தனேஜாவின் திறமையை பார்த்து 2023ஆம் ஆண்டு இவருக்கு தலைமை நிதி அதிகாரி பொறுப்பினை வழங்கினார் எலான் மஸ்க். 2024 ஆம் ஆண்டில் மட்டும் இவர் 1157 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார். இவருடைய சம்பளத்தில் பெரும்பாலான தொகை டெஸ்லா நிறுவன பங்குகளில் இருந்து மட்டுமே வந்தது. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான இயக்குனராகவும் அவர் பதவியை வகித்து வருகிறார். இந்தியாவில் டெஸ்லா தொழில் புரிவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தற்போது எலான் மஸ்கின் கட்சியிலும் இவருக்கு பொறுப்பு கிடைத்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+