இன்று காதல் தினம், காதல் உணர்வுகள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் இந்த நாளில், இந்திய குடும்பங்களில் காலம் காலமாக இருக்கும் கணவன் - மனைவிக்கு மத்தியில் இருக்கும் ஒரு முக்கியமான கேள்வி - பண விஷயங்களில் எப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது? என்பதுதான்.
குடும்பத்தில் ஒரு சில அடிப்படை விஷயங்கள் சரியாகவும், வெளிப்படையாகவும் இருந்தாலே பல பிரச்சனைகளை எளிதாக தவிர்த்து விட முடியும். இதில் பண விஷயமும் முக்கியமான ஒன்று.

சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குடும்பங்கள் இப்போது 75 சதவீதம் நிதி விவகாரங்களைத் ஒப்பனாக பேசுகின்றன என்று தெரியவந்துள்ளது. முன்பெல்லாம் கணவன் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற விஷயம் கூட மனைவிக்கு தெரியாது. இந்த நிலை பெண்கள் வேலைக்கு சென்ற பின்பு கொஞ்சம் மாறியது, நீ சம்பாதிப்பது உனக்கு, நான் சம்பாதிப்பது எனக்கு என்ற நிலை உருவானது. ஆனால் இப்போது இந்திய குடும்பங்களில் நடந்துள்ள மாற்றம் மிகவும் ஆரோக்கியமானது, இருவரும் சம்பாதித்து நிதி பாதுக்காப்போடு வாழ வேண்டும் என்ற மனநிலை இளம் தலைமுறையினரிடம் அதிகமாக இருக்கிறது.
இதனால் காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்திலும் சரி, கணவன் - மனைவி வெளிப்படையாக உள்ளனர். இதனால் பட்ஜெட் தயாரிப்பு, தினசரி செலவுகளை கண்காணித்தல், பெரிய முடிவுகளை எடுப்பது என எல்லாவற்றையும் இணைந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கின்றனர். குறிப்பாக 35 வயதுக்குக் குறைவான இளம் தம்பதிகள் முதலீடு செய்வது பற்றி அதிகம் பேசுகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்.
ஆனால் இந்த நல்ல மாற்றத்திற்கு இடையே ஒரு சவால் இருக்கிறது. அதே ஆய்வில், தங்கள் துணையை நிதி விஷயங்களில் முழுமையாக நம்புவதாக வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே சொல்கிறார்கள். 26 சதவீதம் பேர், "சில நிதி விவரங்களை என் துணை என்னிடம் சொல்லாமல் வைத்திருக்கிறார்" என்று கூறுகின்றனர். "இது உறவில் நம்பிக்கை இல்லை என்று பொருள் இல்லை. இருவரும் தங்கள் நிதி இலக்குகள், அபாயங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேச வேண்டிய நேரம் இது" என்று ஃபின்னோவேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நேஹல் மோதா கூறுகிறார்.
இந்த காதலர் தினத்தில், கணவன் - மனைவி தங்கள் பணத்தை ஒன்றாக வளர்க்க என்ன செய்ய வேண்டும்? நேஹல் மோதா கொடுக்கும் ஐந்து எளிய படிகளைப் பின்பற்றினால் போதும்.
முதலில், பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள். வீட்டு செலவுகளை எப்படிப் பகிர்ந்து கொள்வது, இருக்கும் கடன்களை எப்படிக் கையாள்வது, ஒரு கூட்டு வங்கிக் கணக்கு வைக்க வேண்டுமா, இருவருக்குமான தனிப்பட்ட இலக்குகள் என்ன என்பதை இருவரும் அமர்ந்து முடிவு செய்யுங்கள். செலவுகள், சேமிப்பு, முதலீடு என மூன்றையும் தனித்தனியே பிரித்து வைக்கும் எளிய முறையைப் பயன்படுத்தினால் குழப்பம் வராது.
இரண்டாவதாக, நிதித் திட்டமிடலை ஒரு குடும்பக் கலையாகக் கருதுங்கள். குடும்பப் பயணம் போன்ற குறுகிய காலத் தேவைகள், வீடு வாங்குவது போன்ற நடுத்தர கால இலக்குகள், ஓய்வு காலம் போன்ற நீண்ட காலத் திட்டங்கள் - இவை அனைத்தையும் சேர்ந்து திட்டமிடுங்கள். இப்படிச் செய்தால், பணத்தைப் பல வழிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இருவருக்கும் தனித்தனி இலக்குகளும் நிறைவேறும்.
மூன்றாவதாக, வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும். முதலில் 6 முதல் 12 மாதங்களுக்கான குடும்ப செலவுகளைச் சேமித்து வைக்கும் அவசர கால நிதியை உருவாக்குங்கள். ஆயுள் காப்பீடு, குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ், வீடு-வாகனம் உள்ளிட்ட சொத்துகளுக்கான காப்பீடு - இவை அனைத்தையும் உடனடியாக எடுத்துக் கொள்ளுங்கள். வேலை இழப்பு, குழந்தை பிறப்பது, இடமாற்றம், பெற்றோரைப் பார்த்துக் கொள்வது போன்ற எந்தச் சூழல் வந்தாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு உங்கள் நிதி நிலையை வலிமையாக்க வேண்டும். அதற்கு ஏற்ற பணப்புழக்கமும் நெகிழ்வும் இருந்தால் மட்டுமே வாழ்வில் அமைதியும் காதலும் இருக்கும்.
நான்காவதாக, எந்த நோக்கமும் இல்லாமல் முதலீடு செய்யாதீர்கள். இலக்கின் கால அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். அடுத்த ஆறு மாதத்தில் டூர் போக வேண்டும் என்றால் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுங்கள். மூன்று-ஐந்து ஆண்டுகளில் வீடு வாங்க வேண்டும் என்றால் பாதுகாப்பு + ரிஸ்க் இணைந்த முதலீட்டை தேர்வு செய்யுங்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் திட்டங்கள் இருந்தால் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்தால் நிதி ஒழுக்கம் தானாக வரும், பணமும் வளரும்.
ஐந்தாவதாக, உங்கள் வருமானத்தில் 10 முதல் 15 சதவீத தொகையை சேமிப்புக்கும் மற்றும் முதலீட்டுக்கும் ஒதுக்குங்கள். சம்பளம் அதிகரிக்கும் போது இந்த அளவையும் சிறிது சிறிதாக உயர்த்துங்கள். ஒரே நேரத்தில் பெரிய தொகையைச் சேமிக்க முயற்சிப்பதை விட, தினசரி, மாதாந்திர அடிப்படையில் தொடர்ந்து செய்வது தான் உண்மையான வெற்றியைத் தரும்.
இப்படி கணவன் - மனைவி பணம் பற்றி திறந்து பேசி, பொறுப்புகளைப் பகிர்ந்து, எதிர்பாராத நிலைமைகளுக்கு தயாராகி, இலக்குகளை நோக்கி முதலீடு செய்தால், அவர்கள் ஒரு பலமான நிதி உறவை உருவாக்கு முடியும்.
பிப்.14 காதலர் தினத்தில் இந்த எளிய பழக்கங்களைத் தொடங்குங்கள். நாளை உங்கள் எதிர்காலம் உறுதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் இருக்கும். காதலர் தின வாழ்த்துகள்! உங்கள் காதலும் பணமும் சேர்ந்து செழிக்க தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications