மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 2 மாதம் டிவி முன்பு கட்டிப்போடும் இந்திய பிரீமியர் லீக்-ன் மதிப்பு 2024 இல் ரூ.82,700 கோடியாக மட்டுமே மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 2023 இல் ரூ.92,500 கோடியாக இருந்த நிலையில் 10.6% குறைந்துள்ளது என D&P அட்வைசரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் வுமன் பிரீமியர் லீக்-ன் மதிப்பு ரூ.1,250 கோடியிலிருந்து ரூ.1,350 கோடிக்கு உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 8% உயர்ந்துள்ளது.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ப்ரீமியர் லீக்-ல் இருக்கும் அணிகளில் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் மிகவும் மதிப்புள்ள பிரான்சைஸ் ஆக இந்த வருடமும் தொடர்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியைத் தொடர்ந்து தல தோனி-யின் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது.
ஐபிஎல் தொடரை டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் IPL மதிப்பில் வீழ்ச்சி-க்கு என்ன காரணம்..? இதுகுறித்து D&P அட்வைசரி வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறுகிறது..?
டி&பி அட்வைசரியின் மேனேஜிங் பார்ட்னர் என்.சந்தோஷ் கூறுகையில், "எங்களின் கடந்த ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையில், ஒளிபரப்பு உரிமைகளின் ரினிவல் (தற்போதைய சுழற்சியின் பின்) மதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கும் என நாங்கள் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் தற்போது IPL ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்ற இந்திய மீடியா துறையில் போட்டி இருக்காது என கணிக்கப்படுவதால் ஏல மதிப்பு குறையும் என கணிக்கப்படுகிறது " என்று கூறினார்.
சீ மற்றும் சோனி மத்தியிலான இணைப்பு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் ஜியோ, ஸ்டார் நெட்வொர்க் வசம் தான் ஒளிபரப்பு உரிமை செல்லும். காரணம் ஜியோ - ஸ்டார் கூட்டணியை எதிர்த்துப் போட்டிப்போட யாரும் இந்தியச் சந்தையில் இல்லை.
இதேபோல் அமேசான், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற முக்கிய டெக் நிறுவனங்கள் கடந்த முறையும் IPL மீடியா உரிமைகளை வாங்குவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் அடுத்த சுற்றிலும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, காரணம் ஸ்போர்ட்ஸ் பிரிவில் இந்த 3 நிறுவனங்களின் ஸ்ட்ரீமிங் பிரிவும் வளரவில்லை.
இந்த காரணிகள் IPL மீடியா உரிமைகள் ஏலத்தில் மந்த நிலையை உருவாக்குவது மட்டும் அல்லாமல், போட்டியே இல்லாத நிலையை உருவாக்கம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் ஐசிசி மாற்று வழியைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL மீடியா உரிமைகள் ஏலம் தான் இப்போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளது, போட்டிப்போட்டு ஸ்பான்சர்ஷிப், விளம்பரம், ப்ரோமோஷன் என பலவும் அதைச் சார்ந்துள்ளது. தற்போது போட்டியே இல்லாமல் மீண்டும் ஜியோ - ஸ்டார் கூட்டணி உரிமையைக் கைப்பற்றினால் விளம்பரம் மூலம் பெரும் தொகையை இக்கூட்டணி சம்பாதிக்கும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications