சீனாவின் விஸ்வரூப உற்பத்தி துறை வளர்ச்சிக்கு அடிப்படை மக்கள்தொகையாக இருந்தாலும், இதற்கு இணையாக பெரும்பாலான உலோக தனிமங்கள் சீனாவில் இருந்தது பெரும் பலம். இது மட்டும் அல்லாமல் உலகில் எங்குமே கிடைக்காத அரிய வகையான உலோகங்கள் சீனாவில் அதிமாக இருப்பது பல முக்கியமான கருவிகள் தயாரிக்க ஏற்ற இடமாக மாறியது.
இப்படியிருக்கையில் இந்தியாவில் பல தொழில்துறை பயன்பாடுகளுக்கான முக்கிய மூலப்பொருளாக விளங்கும் வெனடியம் (Vanadium), குஜராத்தின் கம்பட் வளைகுடாவில் அலங் கடற்கரையில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசு சமீபத்தில் நாடு முழுவதும் கனிம வளங்களை ஆய்வு செய்து கண்டுப்பிடிக்கும் பணியில் மிகவும் தீவிரமாக உள்ளது.

குஜராத் அலங் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட வண்டல் மாதிரிகளில் வெனடியம் (Vanadium) என்னும் அரிய உலோகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெனடியம் (Vanadium) உலோகம் ஸ்டீல் வலுப்படுத்தவும், பேட்டரிகள் தயாரிக்கவும் பயன்படும் முக்கிய கனிம பொருளாக உள்ளது.
இத்தகைய அரிய உலோகங்களின் கனிமங்கள் இந்தியாவில் கிடைப்பது என்பது மிகவும் குறைந்த வாய்ப்புகள் உள்ள நிலையில், இது குஜராத்துக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் மத்திய அரசின் கீழ் செயல்படும் GSI அமைப்பு 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் இருப்பது கண்டறியப்பட்டு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் கொண்டாடியது.
Geological Survey of India (GSI) இதுவரையில் செய்யப்பட்ட பல்வேறு கனிமங்களின் ஆய்வுகளில் முதல் முறையாக வெனடியம் (Vanadium) உலோகம் இருப்பதை இப்போது தான் கண்டுப்பிடித்துள்ளது என GSI அமைப்பின் Nature பத்திரிக்கையில் பி கோபகுமார் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே பிரேக்த்ரூ விஷயமாக பார்க்கப்படுகிறது.
வெனடியம் (Vanadium) உலோகம் தூய்மையாக கிடைப்பது அரிது, மேலும் 55 கனிமங்களில் வெனடியம் உள்ளது. ஆனால் அதை பிரித்து எடுப்பது மிகவும் கடினம், அதேபோல் மிகவும் காஸ்ட்லியாகும். இந்த நிலையில் குஜராத்தில் கண்டறியப்பட்ட titanomagnetite என்ற உலோகத்தில் வெனடியம் இருப்பதை GSI அமைப்பின் மெரைன் மற்றும் கோஸ்டல் சர்வே டிவிஷன் பிரிவு தனது ஆய்வில் கண்டுப்பிடித்துள்ளது.
வெனடியம் உலோகத்தின் தடயங்கள் இதுவரை அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என GSI தெரிவித்துள்ளது. வெனடியம் உலோகம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை சார்ந்த உற்பத்தியில் முக்கியமான மூலப்பொருளாகும்.
உதாரணமாக, டைட்டானியம் மற்றும் அலுமினியத்தின் வெனடியம் உலோகக் கலவைகள் ஜெட் என்ஜின் பாகங்கள் மற்றும் அதிவேக ஏர்ஃப்ரேம்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, இந்த உலோகம் எனர்ஜி சேமிப்பதற்கும் முக்கியமான எலக்ட்ரானிக் காம்போனென்ட்ஸ் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
வெனடியம் உலோகத்தின் முக்கிய அம்சமே அரிப்பு, தேய்மானம் மற்றும் அதிக வெப்பநிலையை எதிர்க்கும் உலோகக் கலவைகளை உருவாக்க பயன்படுவது தான். பெரிய அளவிலான எனர்ஜி சேமிப்பின் கட்டமைப்புக்கு தேவையான வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரிகளை உருவாக்கவும் வெனடியம் உலோகம் பயன்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications