சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கான அதிகாரப்பூர்வ பயணம் கோவையில் துவங்கியது. தமிழகத்தில் சேவைக்கு வந்த இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், என்பது மட்டும் அல்லாமல் வெறும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்ட ஸ்பெஷல் டிரைன் இது.
கடலுக்கும், ரயிலுக்கும் எப்போதும் மக்கள் மத்தியில் உற்சாகம் குறையாது என்பதற்கு ஏற்ப சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தை மக்கள் பூ தூவி வரவேற்றது மட்டும் அல்லாமல் பல ஆர்வமாக பயணம் செய்தனர். முதல் பயணத்திற்கான டிக்கெட் அனைத்தும் வெறும் 3 மணிநேரத்தில் விற்பனையாகியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் அதன் பயணத்தை அருள் முருகன் என்பவர் மிகவும் விளக்கமாக டிவிட்டரில் ரிவ்யூவ் செய்துள்ளார். இவருடைய பதிவுக்கு இதுவரையில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த ரிவ்யூவ் டிவிட்டர் பதிவில் அருள் முருகன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தில் சென்றுள்ளாார், அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை.
வீட்டில் இருந்து 7.30 மணிக்கு கிளம்பி, சேலம் ஜங்ஷன்-க்கு 7.45 மணிக்கு வந்தேன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 8.10க்கு வந்தது 12 நிமிடம் லேட், சேலத்தில் இருந்து 8.12 மணிக்கு கிளம்பியது 12 நிமிடம் லேட். 500 மிட்டர் செல்வதற்குள் 65 மணிக்கு கிலோமீட்டர் வேகம். (Massive Acceleration) என குறிப்பிட்டு உள்ளார்.
ஸ்டீல் பிளான்ட் பிரிட்ஜ்-ல் வரும் போது 70 KMPH, மேக்னசைட் ஜங்ஷன்-ல் 40 KMPH. அவ்வப்போது விளைவுகளில் வேகம் குறைந்தாலும் தொடர்ந்து 110 KMPH வேகத்தில் ரயில் சென்றது. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருக்கும் பெரிய கண்ணாடிகள் ஏற்காடு, சேர்வராயன் மலைகளை ரசிக்க சிறப்பாக இருந்தது.
என்னுடைய சீட் ஏற்கனவே கோவையில் இருந்து வந்த பயணி உட்கார்ந்து இருந்த நிலையில், அதை சுத்தம் செய்துவிட்டு உட்கார்ந்தேன். சுமார் 9 மணிக்கு வெஜ் சாப்பிடும் மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டது, அதன் பின்பு Non Veg சாப்பாடு அளிக்கப்பட்டது மிகவும் தாமதமாக.
IRCTC பிரெட் ஆம்பலெட்-ஐ Non Veg என்று அளிக்கிறது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ல் கேட்ரிங் மிகவும் காஸ்ட்லி, Non Veg சாப்பிடுவோருக்கு டிக்கெட் விலை 25 சதவீதம் அதிகமாகிறது. உணவுக்கான என்னுடைய ரேட்டிங் 1/5, மேலும் உணவு சூடாக இல்லை, கொடுக்கும் காசுக்கான உணவின் தரம் உள்ளது.

வாணியம்பாடிக்கு செல்லும் போது அதிகப்படியாக 128 KMPH சென்றது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். ரயில் வேகம், கம்ஃபர்ட் ரேட்டிங் 5/5. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வேகம் 30 முதல் 130 வரையில் செல்கிறது. சில நேரத்தில் பிற ரயில்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ முந்துகிறது. அரக்கோணம் செல்லும் போது ரயில் தவழ்ந்து சென்றது, கார்ஸ்ஓவர் மற்றும் டிராக்ஷனில் அதிகப்படியான மேம்பாடு தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காபி நன்றாக இருந்தது. ஆனால் காபி கப் தடிமன் மிகவும் லேசாக இருந்தது. எக்சிகியூட்டிவ் கிளாஸ் பார்க்க சிறப்பாக உள்ளது. கேட்டரிங் செலவுகள் குறைக்கப்பட்டால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிரேட். கட்டணம் குறைவாக இருந்தால் மற்றும் மதிப்பு இல்லாத உயர்த்தப்பட்ட கேட்டரிங் கட்டணம் நீக்கப்பட்டால் அது சாமானியர்களுக்கானதாக இருக்கும்.

சேலம் 8.12 மணிக்கு கிளம்பி, ஆவடி 11.14 மணி, அம்பத்தூர் 11.17 மணிக்கு வந்து சென்னை மாநகரம் வரவேற்றது. சென்னை கேட் பிரிட்ஜ்-ஐ 11.30 வந்தது. கோவை - சென்னை 5 மணிநேர 30 நிமிட பயணம், சேலம் - சென்னை வெறும் 3 மணிநேரம் 18 நிமிடம். கிரேட் டீல். வந்தே பாரத் ரயில் பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் 20 நிமிடம் தாமதமானது.

இதேபோல் அருள் முருகன் சென்னையில் இருந்து மீண்டும் சேலத்திற்கு இதே ரயலில் வந்துள்ளார். சேலத்தில் இருந்து 08:12 மணிக்கு கிளம்பி சென்னைக்கு 11:30 மணிக்கு சென்றது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 3.18 மணிநேரத்தில் 335KM பயணம் சராசரி வேகம் 101 KMPH. இதேபோல் சென்னையில் 14:25க்கு கிளம்பி சேலத்திற்கு 17:52 மணிக்கு வந்து சேர்ந்தன்ய 3.27 மணிநேரத்தில் 335KM பயணம் சராசரி வேகம் 97KMPH.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications