வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி 500 மி.லி. ரயில் நீர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கூடுதலாக பயணிகள் கேட்டால் மேலும் ஒரு 500 மி.லி. தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். இரண்டாவது பாட்டிலுக்கு கட்டணம் கிடையாது.
தண்ணீர் விரயத்தை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
இதுவரை வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வந்தன.

இனி அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள்தான் தரப்படும். கூடுதலாகக் கேட்டால் மேலும் ஒரு அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் தரப்படும். இந்த முடிவு பயணிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது 40க்கும் மேற்பட்ட தடங்களில் இயங்கி வருகின்றன.
2019 பிப்ரவரி 15 ஆம் தேதியன்று நாட்டில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பச்சைக்கொடியை ஆட்டி தொடங்கி வைத்தார். முதல் ரயில் புதுதில்லி- கான்பூர்- அகமதாபாத்- வாரணாசி தடத்தில் இயக்கப்பட்டது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செமி ஹைஸ்பீடு வேகத்தில் இயங்குகின்றன. இந்த ரயிலில் வைஃபை உள்பட பல நவீன வசதிகள் உள்ளன. விசாலமான கண்ணாடி ஜன்னல்கள், அதிக வசதியுள்ள கால் வைப்பு பகுதி, வசதியான சாமான் வைக்கும் ரேக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் டிக்கெட் விலையானது பொதுப் பிரிவினருக்கு ₹1,052 ஆகவும், பொருளாதார வகுப்பில் (சிசி நாற்காலி) தட்கல் டிக்கெட்டுக்கு ₹1,262 ஆகவும், ஜெனரலுக்கு ₹1,869 ஆகவும், பிரீமியம் வகுப்பில் (எக்ஸிகியூட்டிவ் சேர்) தட்கல் டிக்கெட்டுக்கு ₹2,299 ஆகவும் இருக்கும்.
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு தரம் அவ்வளவு நன்றாக இல்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர். உணவு விலை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வந்தே பாரத் ரயில்கள் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு அதேநாளில் கிளம்பிய ஊருக்குத் திரும்பும்வகையில் ஷெட்யூல் செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் விரைவில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று அண்மையில் ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications