வந்தே பாரத்: புது கண்ணா புது.. 2 புதிய மாடல் ரயில் விரைவில் அறிமுகம்..!!

இந்திய ரயில்வே துறையில் வந்தே பாரத் ரயில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் வேளையில், ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே 25க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் பயன்படுக்கு வந்த நிலையில் அடுத்த சில மாதத்தில் இன்னும் சில ரயில்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுவரையில் மத்திய அரசு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் சீட்டர் ரயில்கள் மட்டுமே, வந்தே பார்தே சேவை பிரிவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல இரண்டு புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வந்தே பாரத்: புது கண்ணா புது.. 2 புதிய மாடல் ரயில் விரைவில் அறிமுகம்..!!

மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கொடுத்துள்ள தகவல் படி முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் பார்க்க முடியும் என கூறியுள்ளார். ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை 2024 இல் இந்த ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளை வெளியிட நோக்கமாகக் கொண்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைத் தவிர, வந்தே மெட்ரோ என்ற மலிவு ரயிலின் புதிய வகுப்பையும் ஐசிஎஃப் உருவாக்குகிறது. வந்தே மெட்ரோ 12 பெட்டிகள் கொண்ட ரயிலாகும், இது குறுகிய தூர பயணத்திற்கு பயன்படுத்தப்படும். வந்தே மெட்ரோ ஜனவரி 2024க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ குறித்த விபரத்தை ICF அமைப்பின் பொது மேலாளர் பிஜி மல்லையா தெரிவித்தார். தற்போதைய வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கைகள் கொண்ட பெட்டிகளாக இருப்பதால், அவை இரவு நேர பயணங்களுக்கு சாத்தியமில்லாததாக உள்ளது. புதிய ஸ்லீப்பர்கள் இந்த சிக்கலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்லீப்பர் ரயில்கள் இந்தியாவின் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மற்றும் ரஷ்யாவின் TMH குழுமத்தின் கூட்டணி மூலம் தயாரிக்கப்படுகின்றன. மத்திய அரசு 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது, இதில் 120 ரயில்கள் ரயில் விகாஸ் நிகாம் மற்றும் ரஷ்யாவின் TMH தயாரிக்கிறது.

மீதமுள்ள 80 ரயில்கள் Titagarh வேகன்கள் மற்றும் BHEL கூட்டணி தயாரிக்கிறது. புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாக பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+