நாடு முழுவதும் மக்களிடையே வந்த பாரத் ரயில்களுக்கு சிறந்த வரவேற்பு இருக்கிறது. வழக்கமாக நாம் செல்லும் நகரங்களுக்கு குறைந்த பயண நேரத்திலேயே சென்று விடலாம் என்பதால் ஏராளமான மக்கள் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் வருகிறார்கள்.
அந்த வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் கட்டணங்கள் என்ன என்ற விவரங்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரிய நகரங்களை எல்லாம் இணைக்கக் கூடிய வகையில் 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்திலும் நெல்லை, கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் படுக்கை வசதி கிடைத்தால் நன்றாக இருக்கும், வயதானவர்கள் இன்னும் சவுகரியமாக பயணிக்கலாம் என்ற கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்து தான் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் ரயில் அஸ்ஸாமின் கவுகாத்தி மற்றும் மேற்குவங்கத்தின் கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது. இதனை பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் ஸ்லீப்பர் ரயில்களுக்கான கட்டண விவரங்கள் குறித்த தகவல்களை ரயில்வே வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் ஆர்ஏசி எனப்படும் பகுதியளவு இருக்கை உறுதியான டிக்கெட் வசதி இருக்காது, அதேபோல வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலும் இருக்காது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 958 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்பு 2,299 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 2,97ஒ ரூபாயும், முதல் வகுப்பு ஏசி வகுப்புக்கு 3,640 ரூபாயும் டிக்கெட் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட்டுக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் வரையிலான ஏசி முதல் வகுப்பின் டிக்கெட்டுக்கு 1,520 ரூபாய், ஏசி இரண்டாம் வகுப்புக்கு 1240 ரூபாய், ஏசி மூன்றாம் வகுப்புக்கு 960 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்ச கட்டணம் 960 ரூபாயாக இருக்கும். பயணம் செய்ய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி என்றால் காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகள் இந்த ரயிலில் வழங்கப்படாது. முன்பதிவு காலம் தொடங்கும் போது அனைத்து படுக்கை வசதிகளும் அனைத்து பயணிகளுக்கு கிடைக்கும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கான டியூட்டி பாஸ் ஆகி ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருக்கும், வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications