டெல்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கூடிய விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. இருந்தாலும் மத்திய ரயில்வே துறை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை இதனை இயக்கலாமென அனுமதி தந்துள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் சூழலில் வந்தே பாரத் ரயிலிலேயே படுக்கை வசதி கொண்ட ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் படுக்கை வசதி கொண்டே வந்தே பாரத் ரயில்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பொறுத்தவரை 16 பயணிகள் பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஏசி 3 டையர் பெட்டிகளும், 4 ஏசி 2 டையர் பெட்டிகளும் , 1 ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டியும் இருக்கும் என ரயில்வே அமைச்சகம் கூறுகிறது. பயணிகளுக்கு தேவையான பல்வேறு நவீன வசதிகள் இதில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரயிலாக இவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் இருக்கும் பிஎம்எல் நிறுவனத்தில் தான் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் முழுவதுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அது தவிர அனைத்து பெட்டிகளும் தானியங்கி கதவுகள் உள்ளன.

மேலும் மொபைல் போன்களுக்கான சார்ஜிங் வசதிகள், மேல் இருக்கக்கூடிய எளிதாக ஏறி செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் மிக முக்கிய அம்சமாக மேலே இருக்க கூடிய இருக்கைக்கு படிக்கட்டில் ஏறி செல்லக்கூடிய வசதி பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பொது அறிவிப்பு அமைப்பு, இரவு நேர விளக்குகள் ,விஷுவல் டிஸ்ப்ளே உள்ளிடவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ரயில்களை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க பயணிகளின் சவுகரியத்தை கருத்தில் கொண்டு ரயில் பெட்டியின் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அது மட்டும் இன்றி இது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட காவச் அமைப்பு கொண்டு இருக்கிறது. இதனால் ரயில் விபத்துகள் நடைபெறுவது பெருமளவில் தவிர்க்கப்படும். இதனிடையே கூடிய விரைவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு ரயில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika



Click it and Unblock the Notifications