பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் 2017ல் தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் நாட்டின் முதல் அதிவேக ரயில் பாதைக்கான பணிகள் மந்தகதியில் நடந்தது. இருப்பினும் தற்போது ரயில் பாதை அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 2026ம் ஆகஸ்ட் மாதத்துக்குள் சூரத்-பிலிமோரா இடையே புல்லட் ரயில்களை இயக்க ஜப்பானை சேர்ந்த ஷின்கான்சென் சிஸ்டம் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.
ஆனால் அது சாத்தியமில்லை மற்றும் மேலும் காலம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்கு முன்னதாக அந்த பாதையில் புல்லட் ரயில்களை இயக்க வாய்ப்பில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜப்பானிய ஷின்கான்சென் புல்லட் ரயில்களை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 2033ம் ஆண்டில்தான் இந்த அதிவேக ரயில் பாதையில் முழு அளவில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில்களை இயக்க தாமதமாகும் என்பதால் அதுவரை, முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பை (ரயில் பாதை) பயன்படுத்தும் நோக்கில் புதிய ஐடியாவை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

முதலில் இந்த அதிவேக ரயில் பாதையில் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்லட் ரயிலுக்காக அதிவேக ரயில் பாதையில் முதலில் ஜப்பானின் டிஎஸ்-எடிசி சிக்னல் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அண்மையில் இந்த பாதையில் வந்தே பாரத் ரயில்களுக்கு இணக்கமான ஐரோப்பிய சிக்னல் அமைப்பதற்கான (இடிசிஎஸ்-2 சிக்னலிங்) ஏலத்தை வெளியிட்டது. ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் ஏழு வருட ஒப்பந்த காலத்தில் இடிசிஎஸ்-2 சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுபாட்டு அமைப்பை வடிவமைத்து தயாரித்து வழங்கும், நிறுவுதல் மற்றும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளும்.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை அதிவேக ரயில் பாதை திட்டத்தின் உத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உறுதி செய்வது போல் உள்ளது. மேலும், தற்போது ஜப்பானிய ரயில்கள் இல்லை என்பதால், அதிக மூலதனம் தேவைப்படும் இந்த திட்டத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
2027ம் ஆண்டுக்குள் இந்த பாதையில் வணிக ரீதியாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆக, புல்லட் ரயில் பாதையில் முதலில் வந்தே பாரத் ரயில்தான் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷின்கான்சென் ரயில்கள் அறிமுகப்படுத்தும் வரை இந்த பாதையில் இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் இடைக்கால தீர்வாக இயங்கும். ஷின்கான்சென் ரயில்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் இடிசிஎஸ்-2 அமைப்பு மற்ற அதிவேக ரயில் திட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படும் என தகவல்.
Story written by: Subramanian
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications