உலக பணக்காரர்களில் ஒருவரும், உலகின் முன்னணி ஸ்டீர் தொழிலதிபருமான லட்சுமி மிட்டல் அவர்களின் மகள் வனிஷா மிட்டல். அவர் அவருடை தந்தையின் ஆர்சிலர் மிட்டல் என்ற நிறுவனத்தின் இன்டிபென்டென்ட் டைரக்டர் ஆக உள்ளார். வனிஷா மிட்டல் 2004 ஆம் ஆண்டில் இஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டார்.
வனிஷா மிட்டல் இந்தியாவின் குடிமகளாக இருந்தாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் லண்டனில் தான், ஐரோப்பிய வணிகப் பள்ளியில் இளங்கலை அறிவியல் பட்டத்தை முடித்த அவர் ஏப்ரல் 2011 இல் Aperam என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். இவருடைய ஓரே சகோதரரின் பெயர் ஆதித்யா மிட்டல்.

42 வயதான வனிஷா மிட்டல் 2004 ஆம் ஆண்டில் தனது திருமணத்தின் மூலம் உலகளவில் பிரபலமானது மட்டும் அல்லாமல், இன்றளவும் அதிகம் செலவு செய்து திருமணம் செய்துக்கொண்டவர் என பட்டத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த அமித் பாட்டியா-வை திருமணம் செய்து கொண்டார் வனிஷா மிட்டல். அவரது தந்தை லட்சுமி மிட்டல் அவருடைய ஆசை மகளின் திருமணத்திற்காக சுமார் 55 மில்லியன் டாலர்களை செலவு செய்தார். 2004 ஆம் ஆண்டில் 55 மில்லியன் டாலர் எனில் அப்போது இதன் மதிப்பு ரூ.240 கோடிக்கு மேல். தற்போதைய ரூபாய் மதிப்பீட்டில் கணக்கிட்டால் 550 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் வெர்சாய்லஸ் அரண்மனையில் (The Palace of Versailles) தான் திருமணம் வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா திருமணம் நடந்தது. இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் ஆறு நாட்கள் நடந்தன. பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது திருமணத்திற்கு செலவிட்டதை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா திருமணத்தில் பிரபல பாடகரான Kylie Minogue 30 நிமிடங்களுக்கு நடனமாடி பாடுவதற்கு மட்டும் சுமார் 330,000 பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திருமண விழாவில் ஷாருக்கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இவர்களுடைய திருமணத்திற்கு வந்த 1000க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் தங்குமிடம், பயணச் செலவுகள் என வனிஷா மிட்டல்-ன் தந்தை லட்சுமி மிட்டல் செலுத்தினார். மேலும் இந்த வெர்சாய்லஸ் அரண்மனையில் நடத்தப்பட்ட ஒரே தனிப்பட்ட விழா அவளுடையது தான், மற்றவை அனைத்தும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்வுகள்.

மேலும் வெர்சாய்லஸ் அரண்மனையில் நடந்த இந்த பிரம்மாண்ட திருமணத்தின் நடன நிகழ்ச்சிக்கு இந்தியாவில் பிரபலமாக நடன இயக்குனர் ஃபர்ஹா கான் நடனங்களை வடிவமைக்க சென்றார். மேலும் பாலிவுட் பிரபலம் ஜாவேத் அக்தர் ஒரு நாடகத்தை எழுதியிருந்தார்.
இவர்கள் மட்டும் அல்லாமல் வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா திருமணத்தில் ஜூஹி சாவ்லா, ராணி முகர்ஜி, சைஃப் அலி கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒரு பங்கேற்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார்கள். திருமண விழாவில் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார்.
வனிஷா மிட்டல் - அமித் பாட்டியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அமித் மற்றும் வனிஷா இருவரும் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. வனிஷா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலுக்கு அமேவி என்ற சூப்பர் படகு உள்ளது, இதன் விலை 125 மில்லியன் டாலர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications