இந்தியாவின் மிகவும் பழமையான வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான வாடியா குரூப்-ன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும் வருண் பெர்ரி-க்கு அடுத்தடுத்து முக்கியப் பதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது முக்கியமாக இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் வாடியா குழுமத்தின் Go First நிறுவனமும் பெரிய அளவிலான மாற்றத்தை செய்து புதிய வர்த்தகம் மற்றும் வருவாய் ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் Go First நிறுவனத்தின் புதிய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியை வருண் பெர்ரி-க்கு கொடுக்கப்பட்டு உள்ளது. யார் இந்த வருண் பெர்ரி..
வாடியா குழுமம்
வாடியா குழுமத்தின் தலைவராக இருக்கும் நுசில் வாடியா சுமார் 10 வருடத்திற்கு முன்பு தனது பிஸ்கட் வர்த்தக நிறுவனமான பிரிட்டானியா-வை லாபகரமான நிறுவனமாக மாற்ற சிஇஓ-வாக நியமிக்கப்பட்டவர் தான் வருண் பெர்ரி. பிரிட்டானியா-வில் இவர் செய்த மாற்றங்கள், முடிவுகள் பெரிய அளவிலான லாபத்தையும், வருமானத்தையும் கொடுத்தது.
வருண் பெர்ரி
இதன் மூலம் வருண் பெர்ரி பிரிட்டானியா நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் வாடியா குழுமத்தின் பிற நிறுவனங்களான பாம்பே டையிங், Go First போன்ற நிறுவனத்தின் முக்கிய முடிவுகளையும், ஆலோசனைகளையும் கூறும் அதிகாரியாக உருவெடுத்துள்ளார்.
பிரிட்டானியா
இந்த நிலையில் வருண் பெர்ரி செப்டம்பர் மாதம் பிரிட்டானியா நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் Go First நிறுவனத்தின் சேர்மன் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
Go First நிறுவனம்
61 வயதாகும் வருண் பெர்ரி தற்போது பிரிட்டானியா மட்டும் அல்லாமல் விமானப் போக்குவரத்துத் துறையில் இயங்கி வரும் Go First நிறுவனத்தையும் நிர்வாகம் செய்ய உள்ளார். வாடியா குழுமத்தின் தலைவராக இருக்கும் நுசில் வாடியா இப்பதவியில் இருந்த நிலையில் நுசில் வாடியா தற்போது ரத்தன் டாடா போல் chairman emeritus பதவியைப் பெற்றுள்ளார்.
புதிய பதவி
வருண் பெர்ரி Go First நிறுவனத்தின் உயரிய பதவியைப் பிடித்துள்ள நிலையில் இவருக்கு உதவியாக அமெரிக்காவின் Spirit Airlines நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான Ben Baldanza தொடர்ந்து துணை தலைவராக இருப்பார்.
கோ பர்ஸ்ட் ஐபிஓ
விமானப் போக்குவரத்துத் துறையில் மக்களுக்குக் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் மீது போதுமான நம்பிக்கையும், விருப்பமும் இல்லாத காரணத்தால் 3600 கோடி ரூபாய் ஐபிஓ திட்டத்தை வெளியிடுவதைத் தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications