இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் அடுத்தடுத்து வாரிசு கைகளுக்கு மாறி வரும் வேளையில், மக்கள் அதிகம் சாப்பிடும், குடிக்கும் உணவு பொருட்களை நிர்வாகம் செய்யும் ஆர் ஜே கார்ப்பரேஷனின் தலைமை பொறுப்பு வாரிசு கைகளுக்கு அதன் தலைவர் ரவி ஜெயப்பூரியா கொடுத்துள்ளார்.
மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆர் ஜே கார்ப்பரேஷனில் (RJ Corp) தலைமை மாற்றத்தை நிறுவனர் ரவி ஜெயப்பூரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி, அவரது மகன் வருண், பானங்கள் மற்றும் உணவு (Food & Beverages) வர்த்தகத்தை கவனிப்பார், மகள் தேவயானி கல்வி மற்றும் மருத்துவ துறைகளின் பொறுப்பேற்க உள்ளார்.
பெப்சிகோ நிறுவனத்தின் அமெரிக்காவுக்கு வெளியில் உலகின் இரண்டாவது பெரிய பாட்டிலிங் தொழிற்சாலையை வருண் பிவரேஜஸ் (Varun Beverages -VBL) நிர்வாகம் செய்கிறது. இதேபோல் இந்தியாவில் கேஎஃப்சி, பீட்சா ஹட் மற்றும் கோஸ்டா காபி கடைகளை தேவயானி இண்டர்நேஷனல் (Devyani International Ltd - DIL) நிர்வகிக்கிறது.
வருண் பிவரேஜஸ் மற்றும் தேவயானி இண்டர்நேஷனல் ஆகிய இரண்டு நிறுவனமும் ஆர் ஜே கார்ப்பரேஷன் கீழ் உள்ளது. இதன் நிறுவனர் ரவி ஜெயப்பூரியாவின் மகன் வருண் மற்றும் மகள் தேவயானி பெயர்களில் இயங்கும் இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது முக்கியமான விஷயம்.
39 வயதான தேவயானி ஜெயப்பூரியா, பிரீமியம் மகப்பேறு மருத்துவமனை சங்கிலியான 'கூகூன்' (Cocoon) மற்றும் ஸ்டெம் செல் வங்கி போன்ற மருத்துவ துறைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
இதுமட்டுமல்லாமல், குருகிராமில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல்கள் குருகிராமில் உள்ள டி.பி.எஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ஜெய்பூரில் உள்ள தாராவ் ஹைய் ஸ்கூல் ஆகிய கல்வி நிறுவனங்களின் பொறுப்பையும் அவர் ஏற்பார். தேவயானி தொழில்முனைவோர் அம்ரிஷ் ஜெயப்பூரியாவை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில், வருண் பிவரேஜஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி ஆக இருந்தது. இதில், ஜெயப்பூரியா குடும்பத்தினர் மற்றும் ஆர் ஜே கார்ப்பரேஷன் இணைந்து 62.91% பங்குகளை வைத்திருக்கின்றன.
தேவயானி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19,649.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஜெயப்பூரியா குடும்பத்தினர் மற்றும் ஆர் ஜே கார்ப்பரேஷன் இணைந்து 62.74% பங்குகளை வைத்திருக்கின்றன.
வருண் ஜெய்ப்ரியா 2022 இல் அப்போதைய தலைமை நிர்வாகி கபில் அகர்வால் வெளியேறியதை தொடர்ந்து VBL இன் வணிக நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினார்.
வருண் 10 வருடத்திற்கும் மேலாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளார், சிறிய பதிவி மற்றும் பொறுப்புகளில் இருந்து நிறுவனத்தின் வர்த்தகத்தை கற்றார். பெப்சி, 7UP, மிரிண்டா மற்றும் மவுண்டன் டியூ ஃபிஸி பானங்கள், ஸ்டிங் எனர்ஜி டிரிங், டிராபிகானா ஜூஸ் மற்றும் அக்வாஃபினா வாட்டர் உட்பட - பெப்சிகோவின் பானங்களை VBL பாட்டிலிங் மற்றும் விநியோகம் செய்கிறது - உலகளவில் 3.8 மில்லியன் விற்பனை நிலையங்களுக்கு.
இது 45 உற்பத்தி வசதிகளைக் கொண்டு, ஒன்பது நாடுகளில் செயல்படுகிறது வருண் பிவரேஜஸ் . 30 ஆண்டுகளுக்கு முன்னர் பெப்சிகோ இந்தியாவுடன் அதன் வர்த்தக கூட்டணிய தொடங்கிய RJ Corp, தென்னாப்பிரிக்கா, மொராக்கோ, சாம்பியா, ஜிம்பாப்வே, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உரிமையைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications