3 ஆண்டுகளில் 522% லாபம் தந்த வருண் பீவரேஜஸ் நிறுவன பங்கு.. இப்போது முதலீடு செய்யலாமா?

இந்திய பங்குச் சந்தையில், பங்குச்சந்தையே வீழ்ச்சி அடைந்தாலும் கூட FMCG நிறுவன பங்குகள் நமக்கு லாபம் தருபவையாக தான் இருக்கின்றன. அந்த வகையில் பெப்சிகோ நிறுவனத்திற்கு சொந்தமான வருண் பீவரேஜஸ் நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 522 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 757 ரூபாய் அதுவே தற்போது 1608 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இதே காலகட்டத்தில் 52 சதவீதம் தான் உயர்ந்துள்ளது, ஆனால் வருண் பீவரேஜஸ் பங்கு மதிப்பு 522 சதவீதம் அதிகரித்துள்ளது.

3 ஆண்டுகளில் 522% லாபம் தந்த வருண் பீவரேஜஸ் நிறுவன பங்கு.. இப்போது முதலீடு செய்யலாமா?

ஜூலை 11ஆம் தேதி பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கின் மதிப்பு 1597 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 1,673 ரூபாய் , இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 784 ரூபாய். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,07,000 கோடி, பங்கின் ஃபேஸ் வேல்யூ 5, புக் வேல்யூ 53.38.

இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 16,122 கோடி, இதன் லாபம் 2,102 கோடி ஆக இருக்கிறது. நிறுவனத்தின் நிகர மதிப்பு 7,085 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவன பங்குகளில் புரமோட்டர்கள் 62.6 சதவீத பங்குகளை வைத்துள்ளனர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 25 சதவீத பங்குகளை தன்வசம் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிறுவன பங்கினை பொருத்தவரைக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது சுமார் 1000 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் ஒரு பங்கின் மதிப்பானது 273 சதவீதமும் மூன்று ஆண்டுகளில் 522 சதவீதமும் லாபம் தந்துள்ளது .

வருண் பீவரேஜஸ் பங்கு குறித்து ஆனந்த் ரதி தரகு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜிகார் எஸ் பட்டேல் , டெக்னிக்கல் முறையில் பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் பங்கு சற்று குறைந்து ஏறும், என தெரிவித்துள்ளார். 1600 ரூபாயிலிருந்து 1615 ரூபாய் என்ற அளவிற்குள் வரும்போது இந்த பங்கினை வாங்கலாம் என்றும், இது 1685 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நுவாமா தரகு நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனம் மிக வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், எனவே இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. இதன் ஒரு பங்கு மதிப்பு 1865 ரூபாய் என்ற அளவுக்கு உயரலாம் என்றும் கணிப்பு வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரகு நிறுவமான சிஎஸ்எல்ஏ , வருண் பீவரேஜஸ் நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி பாதையில் இருக்கும் என தெரிவித்துள்ளது இதன் ஒரு பங்கின் மதிப்பு 20% வரை உயரலாம் அதாவது 1977 ரூபாய் வரை எட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+