சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், பணத்தை பார்த்து பார்த்து செலவு செய்தாலும் கையில் பணமே தங்காது. பணத்தை சரியாக நிர்வகிக்க தெரிந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படுவதுண்டு. பாரம்பரிய வாஸ்து சாஸ்திரங்களில் படி சில குறிப்பிட்ட நிறங்களில் பர்ஸ் வைத்திருந்தால் பணம் சேரும். புதிய பர்ஸ் வாங்குவதற்கு முன்பு வாஸ்து நம்பிக்கை இருப்பவர்கள் கீழ்காணும் நிறங்களைத் தேர்வு செய்யலாம். இதனால் தொடர்ந்து செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.
பச்சை நிறப் பர்ஸ்: பச்சை நிறம் செல்வ செழிப்பு மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. வாஸ்து சாஸ்திரங்களின்படி புதிய தொடக்கத்திற்கு பச்சை நிறங்கள் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. எனவே பச்சை நிறப் பர்ஸ் வைத்திருந்தால் செல்வ செழிப்பு அதிகரிப்பதோடு, புதிய வாய்ப்புகளும் தேடி வரும். தொழில் வளர்ச்சி, வியாபார விரிவாக்கம் அல்லது பிற வழிகளில் இருந்து வருமானத்தை எதிர்பார்க்கும் நபர்கள் பச்சை நிறப் பர்ஸை தேர்ந்தெடுக்கலாம்.

சிவப்பு நிற பர்ஸ்: வாஸ்து சாஸ்திரங்களின்படி சிவப்பு நிறம் சுறுசுறுப்பையும், ஆற்றலையும் குறிக்கிறது. எதிர்கால இலக்குகளை அடைய தன்னம்பிக்கையை தரக்கூடிய நிறமாக சிவப்பு நிறம் கருதப்படுகிறது. எனவே வணிக உரிமையாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் அடிக்கடி பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்கள் சிவப்பு நிறப் பர்ஸை தேர்ந்தெடுக்கலாம்.
மஞ்சள் நிறப் பர்ஸ்: மஞ்சள் நிறம் பிரகாசம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் கலராகும். இந்தியக் குடும்பங்களில் மஞ்சள் நிறம் மங்களகரமான நிறமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் முக்கியமான விசேஷங்களுக்கு அடிக்கப்படும் பத்திரிக்கை மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. ஆன்மீக ரீதியாகவும் மஞ்சள் நிறத்திற்கு தனி மதிப்பு உண்டு. எனவே பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களை எதிர்பார்ப்பவர்கள் மஞ்சள் நிறப் பர்ஸை பயன்படுத்தலாம்.
தங்க நிறப் பர்ஸ்: தங்கம் இந்தியக் குடும்பங்கள் விரும்பி வாங்கும் ஒன்று. வாஸ்து நம்பிக்கையின் அடிப்படையில் தங்க நிற பர்ஸ்கள் அபரிமிதமான செல்வத்தை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. எனவே ஆடம்பரமான தோற்றத்தை விரும்பும் நபர்களுக்கு தங்க நிறப் பர்ஸ் நல்ல தேர்வாக இருக்கும்.
கருப்பு நிறப் பர்ஸ்: வாஸ்து சாஸ்திரங்களில் படி கருப்பு நிறம் பாதுகாப்பைக் குறிக்கிறது. பலரால் விரும்பப்படும் நிறங்களில் கருப்பு நிறமும் ஒன்று. எனவே பணம் வீண் விரயமாவதை தடுக்க நினைப்பவர்கள், செல்வ வளத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் கருப்பு நிற வாலட்டை பயன்படுத்துவது சிறந்த பலன்களைத் தரும்.
எனவே வாஸ்து நம்பிக்கை இருப்பவர்கள் மேலே கூறப்பட்டுள்ள நிறங்களில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம். ஆனால் அவற்றோடு சேர்த்து கடின உழைப்பும் முக்கியம். சரியான நிதி திட்டமிடுடன் எதிர்காலத்திற்கான சேமிப்பையும் சேர்த்து செய்யும் போது இன்னும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications