வீடுகளைப் பொறுத்தவரை சில விஷயங்களை வாஸ்து படி தான் செய்ய வேண்டும். அப்போதுதான் லட்சுமி கடாட்சம் பெருகும். அதோடு அந்த வீட்டில் இருப்பவர்களும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஒரு வேளை ஏதேனும் குறைகள் இருந்தால்.. அந்த வீட்டில் கஷ்டங்களும், சங்கடங்களும் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இது போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு சரிவர செயல்பட்டால் செல்வ செழிப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் வீட்டில் இருக்கும் பீரோவை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்கும் வரைமுறை உள்ளது.
ஒரு சிலருடைய வீட்டில் பீரோவில் பணத்தை வைத்த உடன் அவை காலி ஆகிவிடும் அல்லது வீண் விரைய செலவுகள் ஏற்படும். இது போன்ற குடும்பங்கள் கண்டிப்பாக வாஸ்து முறைகளைப் பின்பற்றினால் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து முறைப்படி 8 திசைகள் உள்ளன. அவை வடக்கு, வடமேற்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு. இந்த 8 திசைகளில் பீரோவை வைப்பதற்கான சரியான திசை தென்மேற்கு. எனவே பீரோவை தென்மேற்கு திசையில் வைக்கும் பட்சத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு திசையில் வைத்து விட்டு வடக்கு பார்த்தார் போல் அல்லது கிழக்கு பார்த்தார் போல் திறக்கலாம். ஒரு சிலரது வீட்டில் தென்மேற்கு திசையில் பீரோவை வைக்க முடியாத சூழல் ஏற்படலாம். அப்படி இருந்தால் வடமேற்கு திசையில் பீரோவை வைத்துவிட்டு, திறக்கும் பொழுது கிழக்கு பார்த்தார் போல் திறக்க வேண்டும்.
அதோடு இதுபோன்ற வாஸ்து முறைகளைப் பின்பற்றி சரியான திசையில் பீரோவை வைக்கும் போது உங்களுடைய பணம் மற்றும் நகை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு நீங்கள் பீரோவை தென்மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வைக்கும் போது சுவரை ஒட்டி வைக்காமல் சற்று தள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் சுவரோடு ஒட்டி வைக்கும் போது அந்த இடங்களில் படியும் தூசு மற்றும் குப்பைகளை நம்மால் சரிவர சுத்தம் செய்ய முடியாது. சுத்தம் இருக்கும் இடத்தில் பணம் பெருகும் என்பது ஆண்டாண்டாக இருக்கும் நம்பிக்கை.
தற்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. பீரோக்குள் வைக்கும் பணப்பெட்டி அல்லது நகைப் பெட்டி எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும் என்று.. இவ்விரண்டுமே தெற்கு திசையை தவிர்த்து மீதி உள்ள மூன்று திசைகளில் எதை பார்த்து வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக நீங்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் பெட்டியை வைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்த அளவிற்கு வடக்கு திசையை பார்த்து வைப்பது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் குபேரனுக்குரிய திசை என்று வடக்கு திசை சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications