வறண்டு போன சந்தை.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றும் VC-க்கள்.. என்ன நடக்கிறது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்கத் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் புதிய முதலீடுகள் செய்வதை மொத்தமாக நிறுத்தியது.

மத்திய வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தை வைத்திருக்கும் நிலையில் அதிகப்படியான கடன் வாங்கி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்களுக்குத் தற்போது வட்டியை உயர்த்திய பின்பு அதிக வட்டியைச் செலுத்த வேண்டும் என்பதால் லாபம் கொடுக்காத ஸ்டார்ட்அப் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தும், புதிய முதலீடுகளைச் செய்வது நிறுத்தினர்.

இந்த நிலையில் தான் ஏற்கனவே இந்தியச் சந்தையில் முதலீடு செய்த நிறுவனங்கள் மாறுபட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்க் ஆர்டர்.. குஷியில் அசோக் லேலண்ட்! ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்க் ஆர்டர்.. குஷியில் அசோக் லேலண்ட்!

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் பணத்தை மட்டும் போட்டுவிட்டு நிர்வாகம் சரியாக நடக்கிறதா, பணத்தைச் சரியான வழியில் தான் பயன்படுத்தப்படுகிறதா என்று மட்டும் தான் பார்க்கும்.

ஆனால் தற்போது முதலீடு செய்ய மனமில்லாத வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் முக்கியமான ஆலோசனையைத் துவங்கியுள்ளது.

35 பில்லியன் டாலர்

35 பில்லியன் டாலர்

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சுமார் 35 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தற்போது புதிதாகப் பணத்தைப் போடவும் முடியாமல், போட்ட பணத்தைத் திரும்பவும் பெற முடியாமல் இருக்கும் நிலையில் உள்ளது. இதில் பணம் இல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிலையைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.

வென்சர் கேப்பிடல்
 

வென்சர் கேப்பிடல்

இந்தச் சூழ்நிலையில் வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் லாபம் அளிக்காத நிறுவனங்களின் எண்ணிக்கை மலைபோல் குவிந்துள்ளது தெரிய வருகிறது.

மாறுபட்ட டீல்

மாறுபட்ட டீல்

இந்த நிலையில் அதிகப் பணத்தை ஈர்க்கும் நிறுவனங்கள், லாபம் அளிக்காத நிறுவனங்கள், அதிக நஷ்டத்தை அளிக்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத நிறுவனங்கள் என வகையில் பாதிக்கப்பட்டு உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் முதலீட்டு நிறுவனங்கள் மாறுபட்ட டீல்-ஐ முன்வைத்து வருகிறது.

பல தீர்வுகள்

பல தீர்வுகள்

அதாவது தாங்கள் முதலீடு செய்யப் பணத்தைத் திரும்பப் பெற பங்குகளை நிறுவனர்களிடமே விற்பனை செய்வது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிர்வாகம் அல்லது நிறுவனர்களின் உரிமைகளைப் பறிப்பது, இப்படிப் பல வழிகளில் பணத்தைத் திரும்பப் பெறவோ அல்லது நிர்வாகத்தைக் கைப்பற்றவோ முயற்சி செய்து வருகிறது.

ஊழியர்கள் பணிநீக்கம், சிஇஓ ராஜினாமா

ஊழியர்கள் பணிநீக்கம், சிஇஓ ராஜினாமா

இதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிநீக்கம், சிஇஓ ராஜினாமா, நிர்வாக மாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஜாக்பாட்

ஜாக்பாட்

தற்போது 2021க்கு முன்பு மிகப்பெரிய முதலீட்டை ஈட்டிய நிறுவனங்களுக்குத் தான் தற்போது ஜாக்பாட், வேகவேகமாக வர்த்தகத்தையும் சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் பெரு நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் வலையில் சிக்கக் கூடாது என்பதற்காகவே லாபம் அளிக்காத பிரிவுகளை மூடி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

VC talks to take Control of Startup while Funding Drying up

venture capital companies talking to take Control of Startup companies while Funding Drying up amid central banks raising interest rates continuously. Due to this many Startup employees were layoff and CEOs were resigning
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X