டெல்லி: கடந்த மார்ச் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கி வருகின்றன என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த ஒர் ஆண்டு காலாமாகவே தொடர்ந்து மோசமான பொருளாதார மந்த நிலையினால் பல நிறுவனங்கள் தொடர்ந்து சரிவினைக் சந்தித்து வருகின்றன.
இதற்கிடையில் பெரும்பாலான பெரும் நிறுவனங்கள் கூட தற்போது கொரோனாவினால் பெரிய அளவில் இழப்பினை சந்தித்துள்ளன என்று தான் கூற வேண்டும்.

அதிலும் பல்வேறு வகைப்பட்ட இயற்கை வளங்களை சார்ந்திருக்கும் நிறுவனமான வேதாந்தா, சனிக்கிழமையன்று தனது மார்ச் காலாண்டினை அறிவித்துள்ளது. அதில் பெருத்த் நஷ்டத்தினை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் 12,521 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் முக்கிய வணிகங்களான எண்ணெய், காப்பர், எரிவாயு மற்றும் தாது வணிகத்தில் இது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் பெரும் நஷ்டத்தினை கண்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இந்த நிறுவனம் 2,615 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வேதாந்தா, பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 20,382 கோடி ரூபாயாகும். இது முந்தைய காலாண்டில் 20,382 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 25,096 கோடி ரூபாயாக வருமானம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் உலகினையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், மக்களை மட்டும் அல்லாது, நிறுவனங்களையும், பொருளாதாரத்தினையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆக இந்த கடிமான காலங்கள் வேதாந்தாவினையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்.
அதிலும் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலையானது படு பாதாளத்தினை நோக்கி சென்றது. இது இதன் வருவாயில் பெரும் வீழ்ச்சியை ஊக்குவித்தது எனலாம்.
இதுவே வட்டி, தேய்மானம், வரிக்கு முந்தைய லாபம் கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் கடன் விகிதமானது கடந்த மார்ச் 31வுடன் முடிவடைந்த காலாண்டில் 59,187 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications