குஜராத்-க்கு ஜாக்பாட்.. 1000 ஏக்கர் நிலம், 20 பில்லியன் டாலர் முதலீடு.. பிரம்மாண்ட தொழிற்சாலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கப்படும் வருகிறது.

உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சிப் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதேவேளையில் இந்தியாவில் இதுவரையில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையும், அதற்கான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் இந்தியாவில் புதிய துறையில் இதுவரையில் தொடாமல் இருந்து மத்திய அரச உணர்ந்தது.

இதற்கு ஏற்ற வகையில் லாக்டவுன் காலத்தில் சிப் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உற்பத்தியையும் இது பாதித்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை திடீர் முடிவு..! இந்தியாவில் உற்பத்தி செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை திடீர் முடிவு..!

அனில் அகர்வால்

அனில் அகர்வால்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான வேதாந்தா குழுமத்தின் தலைவரும், நிறுவனருமான அனில் அகர்வால் தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தமும் செய்தது.

பாக்ஸ்கான்

பாக்ஸ்கான்

பாக்ஸ்கான் சென்னையில் மிகப்பெரிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை வைத்திருக்கும் நிலையில் வேதாந்தா குழுமம் உடனான கூட்டணியில் பாக்ஸ்கான் தனது புதிய செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையைச் சென்னையில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

20 பில்லியன் டாலர் முதலீடு

20 பில்லியன் டாலர் முதலீடு

ஆனால் தற்போது 20 பில்லியன் டாலர் முதலீட்டு மதிப்பில் உருவாக இகுக்கும் வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி

வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி

இத்தொழிற்சாலையை அமைப்பதற்காக வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி குஜராத் மாநிலத்தில் நிதி மற்றும் நிதி அல்லாத மானியங்களைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தொழிற்சாலைக்காக மூலதனத்தில் சலுகை, மலிவான விலையில் மின்சாரம் போன்ற பல சலுகைகளைப் பெற்றுள்ளது.

1000 ஏக்கர் நிலம்

1000 ஏக்கர் நிலம்

குஜராத் மாநிலத்திடம் இருந்து சுமார் 1000 ஏக்கர் நிலத்தை இலவசமாகச் சுமார் 99 வருடத்திற்குக் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை மலிவான விலையிலும் 20 வருடத்திற்கு ஓரே கட்டணத்திலும் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநில அரசு

குஜராத் மாநில அரசு

வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி இந்த வாரத்தின் இறுதிக்குள் குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் கூட்டணி இத்தொழிற்சாலைக்காகத் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vedanta - Foxconn picks Gujarat for India's biggest semiconductor factory; Big loss for tamilnadu

Vedanta - Foxconn picks Gujarat for India's biggest semiconductor factory, Gujarat govt offered financial and non-financial subsidies including 1,000 acres for free 90 years; Big loss for tamilnadu
Story first published: Tuesday, September 13, 2022, 14:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X