கோடீஸ்வரர் அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தா நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமாகும். வேதாந்தா அலுமினியம், ஆயில் மற்றும் கேஸ், மின்சாரம் மற்றும் ஸ்டீல் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது நிர்வாகத்தை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், உற்பத்தி செய்யும் உலோகங்களின் அடிப்படையில் நிறுவனத்தை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், நிறுவனத்தை 5 நிறுவனங்களாக பிரிக்க பங்குதாரர்கள், கடன் வழங்கியவர்களிடம் (பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்கியவர்கள்) இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவன பிரிப்புக்கு பங்குதாரர்களில் 99.99 சதவீத பேரும், பாதுகாப்பான கடன் வழங்கியவர்களில் 99.99 சதவீத பேரும், பாதுகாப்பற்ற கடன் வழங்கியவர்களில் 99.95 சதவீத பேரும் ஆதரவாக வாக்களித்ததாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்புதல், வேதாந்தா நிறுவனத்தை தனது வணிகங்களை அலுமினியம், எண்ணெய் மற்றும் கேஸ், மின்சாரம், ஸ்டீல் என தனித்தனி நிறுவனங்களாக பிரித்து பட்டியலிட அனுமதிக்கும்.

நிறுவன பிரித்தலில் உருவாக்கப்படும் நிறுவனங்கள், வேதாந்தா அலுமினியம், வேதாந்தா ஆயில் அண்ட் கேஸ்,வேதாந்தா பவர், வேதாந்தா இரும்பு அண்ட் ஸ்டீல் மற்றும் வேதாந்தா லிமிடெட் என 5 நிறுவனங்களாக செயல்படும். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் வேதாந்தா லிமிடெட்டுடன் இணைக்கப்படும். மேலும் புதிய வணிகங்களுக்கான காப்பகமாகவும் வேதாந்தா லிமிடெட் இருக்கும். வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தற்போது பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் பிரித்தல் திட்டத்தின்படி, பிரித்தல் செயல்முறை முடிந்ததும், ஒவ்வொரு வேதாந்தா பங்குதாரரும் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் புதிதாக பிரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் கூடுதலாக 1 பங்கை பெறுவார்கள். வேதாந்தா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட் தொடா்ந்து ஹோல்டிங் நிறுவனமாகவே இருக்கும். நிறுவன பிரிப்பு எதிரொலியாக இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே வேதாந்தா நிறுவன பங்கின் விலை 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.438.95ஆக இருந்தது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications