இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக வேதாந்தா குழும நிறுவனங்கள் இருக்கின்றன. ஸ்டீல், கச்சா எண்ணெய், துத்தநாகம், இரும்பு, அலுமினியம், நிக்கல்,கோபால்ட் , செம்பு உள்ளிட்ட துறைகளில் எல்லாம் வேதாந்தா நிறுவனங்களும் அதன் துணை நிறுவனங்களும் தொழில் செய்து வருகின்றன. 46 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது தற்போது மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
வேதாந்தா மீது குற்றச்சாட்டு: அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது வைஸ்ராய் என்ற ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனம் (Viceroy Research a short seller). இந்த நிறுவனம் வேதாந்தா குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் வேதாந்தா குழும நிறுவனங்களின் நிதி சார்ந்த செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதானி நிறுவனத்திற்கு எப்படி ஹின்டன்பர்க் அறிக்கை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு பிரச்சனை தற்போது வேதாந்தா குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகள் : வேதாந்தா குழுமத்தின் பிரதான நிறுவனம் வேதாந்தா லிமிடெட் இதன் கீழ் தான் ஹிந்துஸ்தான் ஸின்க், ஸ்டெர்லைட் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. வேதாந்தா லிமிடெட்டின் தாய் நிறுவனமாக வேதாந்த ரிசோர்சஸ் நிறுவனம் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே வேதாந்தா குழுமத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. இது வேதாந்தா குழும நிறுவனங்களில் கடன் வழங்கியவர்களுக்கும் பங்கு வைத்திருப்பவர்களுக்கும் பெரிய சிக்கலை உண்டாக்க போகிறது என கூறியுள்ளது.
ஒட்டுண்ணி என விமர்சனம்: வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் இல்லாத ஒரு நிறுவனம். இது ஒரு ஒட்டுண்ணி போல வேதாந்தா குழுமத்திற்கு உட்பட்ட மற்ற நிறுவனங்களின் பணத்தை உறிஞ்சி செலவு செய்கிறது என கடுமையான வார்த்தைகளால் சாடி இருக்கிறது. வேதாந்தா குழுமத்தின் நிதி செயல்பாடுகள் ஒரு மோசடி முதலீட்டு திட்டங்களை போல இருக்கின்றன என இந்த அறிக்கை ஒப்பிடுகிறது. வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட் நிறுவனம் , வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் பணத்தை வாங்கி தன்னுடைய சொந்த கடனை அடைத்து வருவதாக தெரிவித்து இருக்கிறது.

கடன் மூட்டையை சுமக்கிறது: இதன் மூலம் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் கடன்கள் அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டுகிறது. இது வேதாந்தா நிறுவனத்தின் மதிப்பையே அழித்துவிட்டது என்றும் இதுதான் அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களுக்கு பிணையமாக இருந்தது என்றும் கூறியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாந்த லிமிடெட் நிறுவனத்தில் 5.6 பில்லியன் டாலர்களுக்கு நிதி பற்றாக்குறை இருந்ததாகவும், அதனை ஈடுகட்டாமல் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்ற பிம்பத்தை காட்ட முதலீட்டாளர்களுக்கு அதிக ஈவுத்தொகை வழங்கியது. இப்படி ஈவுத்தொகை வழங்கவும் கடனை அடைக்கவும் மேலும் மேலும் கடனாளியாக மாறி இருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
தவறான தகவல்களை வெளியிடுகிறது: வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தன்னுடைய கடன்கள் மற்றும் வருமானங்கள் குறித்து தவறான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் சாடி இருக்கிறது . நிதி ரீதியாக பல்வேறு முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடைபெற்ற வருகின்றன என குறிப்பிட்டு இருக்கிறது . 2025ஆம் நிதியாண்டில் 4.9 பில்லியன் டாலர்கள் கடனாக வைத்திருப்பதாக கூறுகிறது வேதாந்தா நிறுவனம் ஆனால் கடனுக்கு வட்டியாக மட்டும் 835 மில்லியன் டாலர்களை செலுத்துகிறது. அப்படி என்றால் கடன்களுக்கு 15.8% வட்டியை செலுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நிர்வாக சீர்கேடுகள்: வேதாந்தா லிமிடெட் மற்றும் துணை நிறுவனங்களுக்கு புதிய திட்டங்களுக்கு என நிதி திரட்டி அந்த பணத்தை வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் கடன்களை அடைப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறது என குற்றம் சாட்டி இருக்கிறது. வேதாந்தா குழுமத்தில் மிக தீவிரமான நிர்வாக சீர்கேடுகள் இருக்கின்றன, நிதிகள் சரியாக தணிக்கை செய்யப்படுவதில்லை என அடுத்தடுத்த குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளது. வைஸ்ராய் நிறுவனத்தின் இந்த அறிக்கை வேதாந்தா குழுமத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாந்தா குழுமம் விளக்கம்: இதனிடையே வைஸ்ராய் அறிக்கை முற்றிலும் தவறானது , அடிப்படை ஆதாரமற்றது என வேதாந்தா குழுமம் விளக்கம் தந்திருக்கிறது. வேதாந்தா குழுமத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எங்களை தொடர்பு கொள்ளாமல் எங்களுடைய விளக்கத்தை கேட்காமல் இப்படி ஒரு அறிக்கையை வைஸ்ராய் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது என கூறியிருக்கும் வேதாந்தா குழுமம், ஏற்கனவே பொதுவெளியில் இருக்கக்கூடிய தகவல்களை ஒருங்கிணைத்து திரித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர் என பதில் அளித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications