சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை அடுத்த பெரிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் உற்பத்தி தளமாக மாற்றுவது முக்கிய இலக்காக கொண்டு உள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப் உருவாக்கும் முயற்சியில் டிஸ்ப்ளே கிளாஸ் துறையை சார்ந்த சுமார் 20 கொரிய நாட்டு நிறுவனங்களுடன் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
Korea Biz-Trade Show 2023 நிகழ்வின் போது 20 நிறுவனங்கள் உடனான வேதாந்தா குழுமம் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. வேதாந்தா குழுமம் இந்தியாவில் சுரங்கம், உலோக துறையில் இயங்கி வரும் வேளையில் புதிய வர்த்தக துறைக்குள் நுழைய வேண்டும் என திட்டமிட்டு இந்தியாவிற்கு தற்போது முக்கிய தேவையாக இருக்கும் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் உற்பத்தியில் இறங்கும் திட்டத்தை முன்வைத்தது.

வேதாந்தா குழுமம் இந்தியாவில் பாக்ஸ்கான் உடனான கூட்டணியில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசிடம் PLI திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளது ஆனால் உற்பத்தி தர தொழில்நுட்பம் இல்லாததால் விண்ணப்பத்திற்கும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வேதாந்தா குழுமத்தின் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் பிரிவின் உலகளாவிய நிர்வாக இயக்குநர் ஆகர்ஷ் கே. ஹெப்பர் கூறுகையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களுடன் கூட்டு சேர ஆர்வமாக உள்ளன. ஆனால் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 20 கொரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளோம் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications