இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் வேதாந்தா குழுமம், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறைக்கு உறுதுணையாகவும், அடுத்தக்கட்டத்திற்கு செல்ல தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் மாபெரும் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய முடியாது என்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கும் வேளையில், புதிய வர்த்தகத்தில் இறங்குவது மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என நம்பி தைவான் நாட்டின் Hon Hai Precision Industry உடனான கூட்டணியில் இந்தியாவில் 28 நேனோமீட்டர் அளவீடு கொண்ட செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை குஜராத்தில் சுமார் 19 பில்லியன் டாலர் முதலீட்டில் செய்ய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த மாபெரும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து உதவி தொகை, ஊக்க தொகை பெற வேண்டி அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது. இந்த உதவி தொகை மட்டுமே பல பில்லியன் டாலர் மதிப்பில் கிடைக்கும் என்பதால் பல மாதங்களாக தைவான் நாட்டின் Hon Hai Precision Industry (இந்தியாவில் இதன் பெயர் பாக்ஸ்கான் -FOXCONN) நிறுவனமும் காத்திருந்தது.
ஆனால் தற்போது வேதாந்தா குழுமம் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து இந்தியாவில் அமைக்கப்போகும் 19 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அரசின் விதிமுறைகளுக்குள், கட்டுப்பாடுகளுக்குள் வரவில்லை என்பதால் ஊக்கத்தொகை வழங்க முடியாது என அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டணி மீண்டும் உதவித்தொகைக்காக சில மாற்றங்களை செய்து விண்ணப்பித்தாலும் தொடர்ந்து தாமதமாகும்.
மோடி சென்னை உற்பத்தி tamilnadu
வேதாந்தா குழுமம் தனது உலோகம் மற்றும் சுரங்க பிரிவின் கடன் அளவை குறைக்க முடியாமலும், புதிய முதலீடுகளை பெற முடியாமலும் தவித்து வரும் வேளையில், இந்தியாவில் முதல் மாபெரும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பதில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் அரசின் உதவி தொகை கிடைக்காத காரணத்தால் அதிகப்படியான முதலீட்டை அனில் அகர்வால் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.
வேதாந்தா குழுமம் மற்றும் பாக்ஸ்கான் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் அமைப்பதாக அறிவித்து 9 மாதங்கள் ஆகியுள்ளது. ஆனால் இன்று வரையில் டெக்னாலஜி பார்ட்னர்-யோ அல்லது 28 நேநோமீட்டர் சிப் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்திற்கான உரிமம் தேவை. இது இருந்தால் மட்டுமே மத்திய அரசின் உதவி தொகையை பெற முடியும்.
அரசின் உதவி தொகை கிடைக்காத காரணத்தால் இக்கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பாக்ஸ்கான் தரப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன்பே மொத்த முதலீட்டையும் தானே செய்து அரசின் உதவிகள் இல்லாமல் தொழிற்சாலையை அமைக்க தயார் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாக்ஸ்கான் தனியாக தனது உற்பத்தியை துவங்குமா என்ற எதிர்பார்ப்பும் வந்துள்ளது..? இதேபோல் இந்த தொழிற்சாலையை தனியாக அமைத்தால் குஜராத்தில் இருந்து வெளியேறி வேறு மாநிலங்களுக்கு வர கூட வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications