BPCL பங்குகளைக் கைப்பற்ற சென்ட்ரிகஸ் உடன் அனில் அகர்வால் கூட்டணி.. 10 பில்லியன் டாலர் டீல்..!

இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பார்த் பெட்ரோலியம் கார்ப் -ன் பங்குகளைக் கைப்பற்ற வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து BPCL பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களும் கூட்டணி சேர்ந்து சுமார் 10 பில்லியன் டாலர் தொகை முதலீட்டில் BPCL பங்குகளை முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், வருடம் 8000 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே அளிக்கும் மாபெரும் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.

52.98 சதவீத பங்குகள்

52.98 சதவீத பங்குகள்

20 பில்லியன் டாலர் மதிப்பிலான BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளைக் கைப்பற்ற வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்களின் படி தற்போது வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட்

சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட்

சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் கோல்டுமேன் சாச்சீஸ்-ன் கூட்டணியான Dalinc Ariburnu, இந்திய அரசு தற்போது பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்தப் புதிய முதலீடுகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

10 வருட காலம் திட்டம்

10 வருட காலம் திட்டம்

வேதாந்தா மற்றும் சென்ட்ரிகஸ் அசர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் கூட்டணி 10 வருட காலம் திட்டமாக உள்ளது. தனியார் முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கொண்டு நிறுவனத்தைக் கைப்பற்றி நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் அளவீடுகளை அதிகரித்துவிட்டு பின்பு வெளியேறும் முடிவில் இருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+