தொழிலதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL), தனது லாபத்தில் வியக்கத்தக்க உயர்வை எட்டியுள்ளது. இந்த எழுச்சிக்கு முக்கியக் காரணம், அதன் வெள்ளியின் மூலம் கிடைத்த வருவாய்தான்.
செப்டம்பர் 2025-இல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் (Q2 FY26), ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ரூ.2,649 கோடி என்ற லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 19% அதிகம் ஆகும். இந்த மொத்த லாபத்தில், வெள்ளி மட்டும் சுமார் 40% பங்களித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ரூ.1,060 கோடி லாபம் வெள்ளியின் மூலமே வந்துள்ளது.

வெள்ளி வருவாயில் பிரம்மாண்ட வளர்ச்சி : உலகின் முதல் 5 வெள்ளி உற்பத்தியாளர்களில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனமும் ஒன்றாகும். இந்த காலாண்டில், வெள்ளி மூலம் மட்டும் ரூ.1,706 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டை விட 10% அதிகமாகவும், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 20% அதிகமாகவும் உள்ளது.
உலகளாவிய சந்தையில் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்தது மற்றும் நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டு செயல்திறன் ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு காரணம் ஆகும். ஹிந்துஸ்தான் ஜிங்க் சுரங்கங்களில் ஈயம் மற்றும் ஜிங்க் தாதுக்களுடன் இயற்கையாகவே வெள்ளியும் கிடைக்கிறது. இந்த வெள்ளிதான் நிறுவனத்தின் வருவாய்ப் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதுதொடர்பாக நிறுவனத்தின் நிதித் துறைத் தலைவர் சந்தீப் மோடி பேசுகையில், "லாபத்தில் சுமார் 40% வெள்ளியின் பங்களிப்பு இருக்கிறது. சந்தை சூழ்நிலையும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. அதேசமயம், செலவுகளை சீராக நிர்வகித்து, மதிப்பை உறுதியாக உருவாக்கி வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் ஜிங்க் இந்த இரண்டாவது காலாண்டில் தனது செயல்பாடுகளில் இருந்து மிக அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதாவது, ரூ.8,549 கோடி ஆகும். இது முந்தைய காலாண்டை விட 10% அதிகம். நிறுவனத்தின் EBITDA லாப விகிதம் 52% ஆக உள்ளது. தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் செயல்பாட்டுத் திறன்கள் மூலம், ஜிங்க் உற்பத்தியின் செலவை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைத்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருண் மிஸ்ரா கூறுகையில், "நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த இரண்டாவது காலாண்டு தாது உற்பத்தி சாதனையை மேற்கொண்டுள்ளோம். இது எங்கள் தொடர்ச்சியான திறமையையும், திட்டமிடலை காட்டுகிறது. மேலும், சர்வதேச சுரங்கம் மற்றும் உலோக கவுன்சிலில் (ICMM) இணைந்துள்ள முதல் இந்திய நிறுவனம் என்ற வகையில், பொறுப்பான சுரங்க நடவடிக்கைகளில் எங்கள் முழுமையான ஈடுபாட்டையும், எங்கள் கடமையுணர்வையும் இது பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
சந்தையில் வெள்ளியின் தாக்கம் : வெள்ளி இந்த ஆண்டில் இதுவரை மிகப் பெரிய லாபம் ஈட்டிய உலோகங்களில் ஒன்றாகும். வெள்ளி ஈடிஎஃப் (ETFs) மூலம் முதலீடு செய்தவர்களுக்கு இரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. ஃபியூச்சர்ஸ் சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 70% அதிகரித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சில நகரங்களில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சம் வரை சென்றது.
MCX-இல் வெள்ளியின் விலை ரூ.1.7 லட்சம் என்ற எல்லையைக் கடந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதன் விலை 20% அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த காலாண்டில் நிறுவனம் மாபெரும் லாபத்தைப் பதிவு செய்தபோதிலும், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனப் பங்குகள் இந்த ஆண்டு இதுவரை சுமார் 13% மட்டுமே உயர்ந்துள்ளன.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications