வேதாந்தா லிமிடெட் பங்குகள் தொடர்ந்து 8 வர்த்தக நாளாக தொடர்ந்து சரிவுடனே உள்ளது, பிப்ரவரி 28 அன்று இந்நிறுவனத்தின் 2-பில்லியன் டாலர் நிதி திரட்டல் வரவிருக்கும் வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை சரிந்தது. பிப்ரவர் 28 ஆம் தேதி வர்த்தகத்தில் வேதாந்தா லிமிடெட் பங்குகள் அதிகப்படியாக 262 ரூபாய் வரையில் சரிந்தது.
வேதாந்தா லிமிடெட் கட்டாயம் நிதிதிரட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் முக்கியமான வர்த்தகத்தையும், நிறுவனத்தையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
இதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ் அண்ட் பி குளோபல்
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா ரிசோர்ஸ் விரைவில் 2 பில்லியன் டாலர் அளவிலான கடனை திரட்ட வேண்டும், இல்லையெனில் வேதாந்தா ரிசோர்ஸ்-ன் ஜிங்க் உலோகத்தின் சர்வதேச சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க வேண்டும்.
புதிய திட்டங்கள்
இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் இல்லையெனில் வேதாந்தா ரிசோர்ஸ்-ன் கிரெடிட் ரேட்டிங் பெரும் சரிவை எதிர்கொள்ளும். இதன் மூலம் வேதாந்தா குழுமத்தின் அடுத்தடுத்து திட்டமிட்டு இருக்கும் புதிய திட்டங்கள் அனைத்தும் முடக்கத்தை எதிர்கொள்ளும் என அறிவித்துள்ளது எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்.
ஹிந்துஸ்தான் ஜிங்க்
இதேவேளையில் மத்திய அரசு வேதாந்தா ரிசோர்ஸ்-ன் ஜிங்க் உலோகத்தின் சர்வதேச சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு 3 பில்லியன் டாலருக்கு விற்கும் திட்டத்தை ஏற்கவில்லை. 20 வருடத்திற்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு 29.54 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
ஈவுத்தொகை
ஜனவரி மாதம் வேதாந்தா குழுமம் ஈவுத்தொகையை வெளியிட்டதன் மூலம் மார்ச் 2023 வரையில் வேதாந்தா ரிசோர்ஸ் போதுமான நிதி ஆதாரத்தை கொண்டு உள்ளது. இதேபோல் வேதாந்தா லிமிடெட் ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 15 மில்லியன் டாலர் அளவிலான கடன்கள் முதிர்வடைகிறது. இந்த நிலையில் கடன் அடைக்கவும், நிறுவனத்தை நடத்தவும் ஜூன் மாதத்திற்குள் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகை அவசியமாக உள்ளது.
கடன் முதிர்வு
ஆனால் வேதாந்தா ரிசோர்ஸ் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான இன்டர் கம்பெனி கடன்களையும்,350 மில்லியன் டாலர் கடனை இரு வங்கிகளுக்கு இதே ஜூலை முதல் செப்டம்பர் வரையில் செலுத்த வேண்டும். இதனால் கட்டாயம் வேதாந்தா குழுமம் குறைந்த பட்சம் 500 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வேதாந்தா லிமிடெட் பங்குகள்
இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை காலை 11.20 மணிக்கு 8.82 சதவீதத்திற்கும் மேலாக வேதாந்தா லிமிடெட் பங்குகள் சரிந்தது, இது செப்டம்பர் 16, 2022 க்குப் பிறகு ஐந்து மாதங்களில் எப்போதும் இல்லாத சரிவாகும் இன்றைய வர்த்தகத்தில் 262 ரூபாய் வரையில் சரிந்தது.
8 நாள் தொடர் சரிவு
கடந்த 8 வர்த்தக நாளில் மட்டும் வேதாந்தா லிமிடெட் பங்குகள் 15 சதவீதம் சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் இதுவரையில் 15.19 சதவீதம் வரையில் பங்கு விலை குறைந்துள்ளது, இதில் பிப்ரவரி மாதம் மட்டுமே 18.26 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வர்த்தக முடிவில் 6.58 சதவீதம் சரிந்து 268.45 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications