இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் உற்பத்திக்கான எகோசிஸ்டம் அமைப்பை உருவாக்க சுமார் 30 ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் வேதாந்தா குழுமம் கையெழுத்திட்டு உள்ளதாகச் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ-வில் கடந்த வாரம் நடைபெற்ற வேதாந்தா-அவன்ஸ்ட்ரேட் வர்த்தகக் கூட்டாளர்கள் உச்சி மாநாடு 2022 இல், வேதாந்தா சுமார் 30 ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை உருவாக்க வேதாந்தா நிறுவனம் உறுதி அளித்துள்ள நிலையில் இத்துறையில் பல பொருட்களை நேரடியாக இந்தியாவில் தயாரித்து இந்திய சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு உள்ளது.
30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
மேலும் வேதாந்தா இந்த 30 நிறுவனங்களின் ஒப்பந்தம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றங்களை விட எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை எகோசிஸ்டம் சூழலை உருவாக்குவதை முக்கியமான விஷயமாகப் பார்க்கிறது என வேதாந்தா குளோபல் அமைப்பின் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் வர்த்தகப் பிரிவின் நிர்வாகத் தலைவர் ஆகர்ஷ் கே ஹெப்பர் கூறியுள்ளார்.
வேதாந்தா ரிசோர்சஸ்
வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்-ன் கிளை நிறுவனம் தான் வேதாந்தா லிமிடெட். இந்த நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஜிங்க், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்புத் தாது, எஃகு மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் உற்பத்தியில் இயங்கி வருகிறது.
வர்த்தகம்
இது மட்டும் அல்லாமல் வேதாந்தா குழுமம் இந்தியா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா முழுவதும் இயங்கும் உலகின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் உலோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
வேதாந்தா - பாக்ஸ்கான்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான வேதாந்தா குழுமத்தின் தலைவரும், நிறுவனருமான அனில் அகர்வால், சில மாதங்களுக்கு முன்பு தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தமும் செய்தது.
செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை
20 பில்லியன் டாலர் முதலீட்டு மதிப்பில் உருவாக இகுக்கும் வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை
பாக்ஸ்கான் ஏற்கனவே மிகப்பெரிய தொழிற்சாலை கட்டமைப்பைச் சென்னையில் வைத்திருக்கும் நிலையும், தமிழ்நாடு அரசுடன் நீண்ட கால உறவு இருக்கும் காரணத்தாலும் தமிழ்நாட்டில் இப்புதிய செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிரா
இதேபோல் நாட்டின் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் மகாராஷ்டிராவில் புதிய நிறுவனங்களை ஈர்க்க அதிகப்படியான சலுகைகளை அளிக்கத் தயாராக இருக்கும் நிலையில் அனில் அகர்வால் விருப்பத்தின் பெயரில் குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ளது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
1000 ஏக்கர் நிலம்
வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் உருவாக்க உள்ளது. குஜராத் மாநிலம் இத்தொழிற்சாலைக்காகச் சுமார் 1000 ஏக்கர் நிலத்தை இலவசமாக 99 வருடத்திற்குக் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications