இந்தியாவின் எட்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 7000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போதும் இந்த பணி நீக்கமானது தொடர்ந்து கொண்டுள்ளது. இது கொரோனாவுக்கு பிறகு ஆன்லைன் கல்வி தேவையானது கணிசமாக அதிகரித்த நிலையில், சமீபத்திய காலாண்டுகளாக குறைந்துள்ளது.
இதனால் எட்டெக் ஸ்டார்ட் அப்களில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதற்கிடையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடுத்தடுத்த செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
பணி நீக்கம்
டைகர் குளோபல் பின்னணியில் உள்ள வேதாந்து இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் கொரோனாவுக்கு பிறகு, வளர்ச்சியினை அதிகரிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றது. எனினும் தேவை சரிவானது இருந்து வரும் நிலையில், செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த செலவின் குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.
எத்தனை பேர் பணி நீக்கம்
பெங்களூரு அடிப்படையிலான வேதாந்து நிறுவனம் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 11.6% அல்லது 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதற்கான இழப்பீடினையும் அறிவித்துள்ளது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்களுக்கான அடுத்த கட்ட வேலையினை தேட பயனுள்ளதாக இருக்கும் என அறிவித்துள்ளது.
எந்தெந்த பிரிவில் பணி நீக்கம்?
தற்போது இந்த நிறுவனத்தில் 3300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். வேதாந்துவின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஹெச் ஆர் மற்றும் விற்பனை பிரிவு, கற்றல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல கட்டங்களாக பணி நீக்கம்
ஒட்டுமொத்த எட்டெக் யூனிகார்ன் நிறுவனம் பல கட்டமாக பணி நீக்கம் செய்து வருகின்றது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. கடந்த மே மாதம் 424 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 100 பேரை பணி நீக்கம் செய்தது. தற்போது கிட்டதட்ட 400 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
50% பணி நீக்கம்
இந்த எட்டெக் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள்உட்பட கடந்த மே மாதத்தில் 5600 பேராக இருந்தது. இது தற்போது 3300 பேராக குறைந்துள்ளது. இதன் அதன் லாபத்தினை அதிகரிக்க செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அதன் செலவு குறைப்பு நடவடிக்கையில் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
பைஜூ & அன்அகாடமி
பைஜூ நிறுவனமும் சுமார் 2500 ஊழியர்களை பணி நீய்க்கம் செய்தது. இந்த நிறுவனம் மார்ச் 2023ல் பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மற்றொரு எட்டெக் நிறுவனமான அன்அகாடமி 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பைஜூ நிறுவனமும் பல கட்டமாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தது.
பணி நீக்கம் தொடரலாம்
மேற்கண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தவிர ஃபிரன்ட்லோ, லீட், டாப்பர், ஒயிட் ஹட் Jr, சூப்பர்லேர்ன் மற்றும் Eruditus, உள்ளிட்ட எட் டெக் நிறுவனங்களும்ன் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது. இதே அமேசானின் எட் டெக் பிரிவு வணிகத்தினை முழுமையாக நிறுத்தியுள்ளது. இந்த போக்கானது இன்னும் சில காலம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications