ஒவ்வொரு மாதமும் வீட்டில் சமைக்கப்படும் சைவ மற்றும் அசைவ மதிய உணவுக்கான விலை குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? என்பதை கிரிசில் என்ற நிறுவனம் அறிக்கையாக தயாரித்து வெளியிடும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் கடந்த 1 வருடத்தில் இல்லாத அளவுக்கு சைவ சாப்பாட்டின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற சமையல் பொருட்களின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால் வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவுக்கான விலை குறைந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வீட்டில் சமைத்த சைவ உணவின் விலை 26.3 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை மார்ச் மாதம் 26.6 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 27.4 ரூபாயாக இருந்தது.

காய்கறிகளின் விலை சீராக இருப்பதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தக்காளி கிலோ 21 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் தக்காளி விலை குறைந்துள்ளது. உருளைக்கிழங்கின் விலையும் 11 சதவீதம் குறைந்திருக்கிறது.
பறவைக் காய்ச்சல் மற்றும் அதிகப்படியான விநியோகம் இருந்த காரணத்தினால் கோழிக்கறியின் தேவை குறைவாக இருந்தது. இதனால் அசைவ உணவின் விலையும் இந்த மாதத்தில் மலிவாக இருந்தது. ஏப்ரல் மாதம் பணவீக்கம் அதற்கு முந்தைய மாதமான மார்ச் மாதத்தை விட குறைய வாய்ப்பிருக்கிறது.
இந்த ஆண்டு பணவீக்க விகிதம் 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைந்து 6 சதவீதமாக உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்னை இருக்கும் காரணத்தினால் இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருகிறது. ஜூன் மாத மதிப்பாய்வின் படி மற்றொரு வட்டி விகிதக் குறைப்பு இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 2026-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் விகிதம் 4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னர் 4.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. தற்போதைய கூட்டத்தில் இந்த விகிதம் 0.2% குறைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும்போது உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். காய்கறிகளின் விலை அதிகரித்தால், காய்கறி கொண்டு சமைக்கப்படும் சைவ உணவின் விலையும் அதிகரிக்கும். மாறாக காய்கறிகளின் விலை குறைந்தால் சைவ சாப்பாட்டின் விலை குறையும். மே மாதமும் இதே போல காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்தால் சைவ சாப்பாட்டின் விலை குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications