சமீப காலமாக தக்காளி, வெங்காயம் போன்ற முக்கிய காய்கறிகளின் விலை அதிகரித்து சமையலறை பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவை இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் ஆகும். ரசம் வைப்பதற்கு கூட தக்காளி தேவை. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருகிறது.
சில நாட்களாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. ரூ.60 முதல் ரூ.70 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் 90 ரூபாய் என்ற விலையை நிர்ணயித்துள்ளனர். வெங்காய விலையும் சில காலமாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான செய்திகள் கூட வெங்காய விலை உயர்வதால் வெளியூர்களிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பார்த்தோம்.

கடந்த வாரம் வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ள காரணத்தினால் மொத்த விற்பனை 65 ரூபாய் ஆகவும், சில்லறை விற்பனை 75 முதல் 80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகளின் விலை: புடலங்காய் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாயாகவும், வெண்டைக்காய் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயாகவும், மாங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாகவும், இஞ்சி கிலோ ஒன்றுக்கு 110 ரூபாயாகவும், பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயாகவும், கத்திரிக்காய் 30 முதல் 40 ரூபாயாகவும், பீர்க்கங்காய் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயாகவும் விற்கப்படுகிறது, முருங்கைக்காய் கிலோவுக்கு 150 முதல் 250 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30-க்கும், கிளஸ்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50-க்கும், காலிபிளவர் ஒன்று 10 முதல் 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50-க்கும், முட்டைக்கோஸ் கிலோ 25-க்கும், ஃப்ரஞ்ச் பீன்ஸ் கிலோ 60-க்கும், பட்டர் பீன்ஸ் கிலோ 60-க்கும், சுரைக்காய் கிலோ 30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகற்காய் கிலோ ரூ.30-க்கும், குடைமிளகாய் கிலோ ரூ. 40-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.50.க்கும், பீட்ரூட் கிலோ ரூ.45-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.30-க்கும், தக்காளி கிலோ ரூ.60-க்கும், வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கும் விற்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications