இந்தியாவில் அனைத்து பொருட்களின் விலையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிப்பது காய்கறி மற்றும் பழங்களின் விலை தான்.
நாட்டின் பல பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் நடுத்தரக் குடும்பங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி மற்றும் என்சிஆர்
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், மக்கள் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை அதிகளவில் பாதிக்கிறது.
நொய்டா
நொய்டாவில் சஃபல் ஸ்டோர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகமாக உள்ளது. ரீடைல் விற்பனையாளர்களும் தங்களுக்கு அதிகப்படியான தொகையில் தான் கிடைப்பதாகக் கூறுகின்றனர், இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விலை நிலவரம்
டெல்லி, நொய்டா மற்றும் என்சிஆர் பகுதிகளில் தற்போது உருளைக்கிழங்கு கிலோ ரூ.18-22க்கும், காலிபிளவர் கிலோ ரூ.98க்கும், கத்திரிக்காய் கிலோ ரூ.45க்கும், தக்காளி கிலோ ரூ.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது இது சஃபல் ஸ்டோர்களில் இருக்கும் விலை.
ரீடைல் கடைகள்
இதுவே ரீடைல் கடைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.25-30, காலிஃபிளவர் கிலோ ரூ.100, கத்திரிக்காய் கிலோ ரூ.80, தக்காளி ரூ.50 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஆன்லைனில் இதைவிடக் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வுக்கான காரணம்
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்குச் சாஹிபாபாத்தில் காய்கறிகள் பயிரிடப்பட்டுச் சப்ளை செய்யப்படுவதாகக் காய்கறி விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் அதிகப் போக்குவரத்துச் செலவு காரணமாகக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications