டெல்லி: கரீப் பருவ பயிர்கள் இந்த நேரத்தில் சந்தைக்கு வரத் தொடங்குகையில், காய்கறிகளின் விலை மற்றும் தானியங்கள் விலை குறையும்.
சாதாரணமாக இந்த பருவத்தில் நாடு முழுவதும் பருவமழை பெய்ததால், இந்த பருவத்தில் வரவேண்டிய பயிர்கள் இன்னும் சந்தைக்கு வர ஆரம்பிக்கவில்லை. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் காய்கறிகளின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக உருளைகிழங்கு, தக்காளி, காலிஃபிளவர், கீரை மற்றும் பிற பச்சை காய்கறிகள் விலையானது, கடந்த குளிர்காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவிகிதம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தக்காளி விலை கணிசமாகக் குறைந்துவிட்டாலும் அது கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது.
மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் அக்டோபரில் பெய்த மழையால் வெங்காயம் மற்றும் தக்காளி பிற காய்கறிகளும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உயர வழிவகுத்தது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அளித்த தரவுகளின் படி, மார்ச் மாதத்திற்குப் பிறகு வெங்காயத்தின் விலை 400 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது.
கடந்த மார்சில் கிலோ வெங்காயம் விலை 15.87 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 3, 2019ல் கிலோ வெங்காயம் 81.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் அரிசி, கோதுமை, மாவு, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், தேநீர், சர்க்கரை, வெல்லம், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவற்றின் விலை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. அதிலும் இந்த ஆண்டு கோதுமை மற்றும் அரிசி விலைகள் கூட கிட்டதட்ட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
காய்கறிகளின் மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை உயர்வு நவம்பர் மாத சில்லறை பணவீக்கத்தை அக்டோபரில் 5.54%மாக அதிகரித்துள்ளது. இதே அக்டோபரில் 4.62 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணாமாக நுகர்வோர் விவகாரத் துறை பட்டியியலின் அறிக்கையின் படி, தக்காளி விலை டிசம்பர் 14 அன்று 10 - 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு10 -50 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்வதால் சமையல் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பாமாயில் விலை கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications