இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடு மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் வாகன விற்பனையில் புதிய சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வாகன விற்பனை
பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு அக்டோபரில் உயர்ந்துள்ளதாக ஆட்டோ உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது முற்றிலும் நீங்கி விட்ட நிலையில் மீண்டும் வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அக்டோபரில் விற்பனை எவ்வளவு?
அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஏராளமான கார்கள் விற்பனையாகியுள்ளது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,75,000 முதல் 3,85,000 வாகனங்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அதிகபட்சமாக 3,82,000 வாகனங்கள் விற்பனை ஆகி இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விற்பனையில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேடன் கார்கள்
அக்டோபர் மாதத்தில் விற்பனையான மொத்த விற்பனையில் சேடன் கார்களின் விற்பனை மட்டுமே 25% என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிக அளவு கார்களை விற்பனை செய்த நிறுவனங்களில் மாருதி சுசுகி முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மாருதி விற்பனை 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் கார்கள் கடந்த மாதம் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
டாடா கார்கள்
மாருதி நிறுவனத்தை அடுத்து டாடா, ஹோண்டா போன்ற நிறுவனங்களும் மிகப் பெரிய அளவில் விற்பனையில் சாதனை உள்ளது என்றும் டாடாவின் கார் விற்பனை அக்டோபர் மாதத்தில் 43 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருசக்கர வாகனங்கள்
நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களும் இந்த பண்டிகை நேரத்தில் மிக அதிகமாக விற்பனையாகின்றன. குறிப்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் குஜராத், மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்பனை மிக அதிகமாக இருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விற்பனை சூடுபிடிக்குமா?
அக்டோபர் மாதத்திற்கு பிறகு டிசம்பர் மற்றும் ஜனவரி மீண்டும் பண்டிகை காலம் வருவதால் வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications