வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த 150 குடும்பத்தினர் வசிக்கும் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கிறது காட்டுகொல்லை கிராமம். இங்கே வசிக்கும் 150 குடும்பத்தினருக்கு அவர்களின் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வசிக்கக்கூடிய இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்றும் இந்த 150 குடும்பத்தினரும் உடனடியாக அந்த இடத்தை காலி செய்து தர்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அந்த இடத்திற்கு வாடகை செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம்.

இது தொடர்பாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நோட்டீஸை பெற்ற கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் படி மனு அளித்துள்ளனர். சையது அலி ஷா என்பவர் பெயரில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தங்களுக்கு சொந்தமான நிலங்களை உள்ளூர் தர்காவிற்கு சொந்தமானது என்று கூறுவதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நான்கு தலைமுறைகளாக இங்கே தான் வசிக்கிறோம் எங்களுடைய விவசாய நிலம் இங்கே தான் இருக்கிறது, திடீரென இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என கூறுவது எப்படி நியாயமாகும் இது எங்களுக்கு பேரதிர்ச்சியை தருகிறது என அந்த கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலம் எங்களுக்கு தான் சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கியுள்ள ஆவணங்கள் இருக்கின்றன என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து முன்னணி தலைவர் மகேஷ் இந்த கிராம மக்களை தலைமை ஏற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அழைத்து சென்று புகார் அளிக்க வைத்திருக்கிறார். அவர் அளித்துள்ள போட்டியில் இந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் தான் வசிக்கின்றனர், விவசாயம் செய்கின்றனர். நிலம் இவர்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்களே இருக்கின்றன. திடீரென 330/1 என்ற சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். உடனடியாக மாவட்டம் இதில் தலையிட்டு கிராம மக்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications