வெனிசுலாவில் அமெரிக்க ராணுவ தாக்குதல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்து கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து நிலவி வருகிறது.
வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு என்பதால் அமெரிக்காவின் இந்த தாக்குதல் மூலம் இந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று கவலை இருந்தது. ஆனால் சந்தை நிபுணர்களும், எண்ணெய் வள நிபுணர்களும் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.

வெனிசுலா எண்ணெய் உற்பத்தி நிலை
வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான PDVSA, சனிக்கிழமை அதன் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு இயல்பாக நடப்பதாக தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தாக்குதலில் கச்சா எண்ணெய் உற்பத்தி தளமோ அல்லது சுத்திகரிப்பு தளமோ பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ஏற்கனவே வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை குறைத்துள்ளன. இதனால் சர்வதேச சப்ளையில் வெனிசுலா எண்ணெயின் பங்கு மிகவும் சிறியதாகவே உள்ளது. இதனால் அமெரிக்கா தாக்குதல் மூலம் வெனிசுலா கச்சா எண்ணெய் மீது ஏற்படும் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.
சந்தை நிபுணர்களின் கணிப்பு
குளோபல் ரிஸ்க் மேனேஜ்மென்ட் தலைமை ஆய்வாளர் Arne Lohmann Rasmussen கூறுகையில், அமெரிக்காவின் இந்த தாக்குதல் எண்ணெய் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சந்தையில் எண்ணெய் உபரி உள்ளதால் விலை பெரிதாக உயராது என்றார். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஞாயிறு இரவு வர்த்தகம் தொடங்கும் போது 1 அல்லது 2 டாலர் மட்டுமே உயரலாம் என்று கணித்துள்ளதாக தெரிவித்தார். வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்த போது ஒரு பேரல் விலை 60.75 டாலராக இருந்தது. அடுத்த வாரம் விலை சற்று குறையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக எண்ணெய் சந்தை நிலை
உலக எண்ணெய் சந்தை அனைத்து நாடுகளும் தனது உற்பத்தியை அதிகரிக்க போதுமான திறன் கொண்டுள்ளது. வெனிசுலா பங்கு சிறியதாக உள்ளதால், ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும் சந்தை அதை ஈடுகட்ட முடியும். எனவே அமெரிக்க ராணுவ தாக்குதலால் உடனடி விலை உயர்வு ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications