இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்தது. இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்ப்பதாகவும் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக இந்தியாவை சாடி வந்தது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக அமெரிக்க அரசு கூறி வந்தது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டோம் என வெளியிடவில்லை. ஆனால் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் படிப்படியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டன.
இந்த சூழலில் தான் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது. இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் தங்களுக்கு சொந்தமானவை என அறிவித்த டிரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டு வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என அறிவித்தார். அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் மேற்பார்வையில் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமங்களையும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து வெனிசுலாவிலிருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் மீட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது மூன்று சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவை தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணையை ஏற்றுக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் விரைவாக எண்ணெய் வந்து இந்தியாவை சேர்வதையும் உறுதிப்படுத்தவும் இருப்பதிலேயே பெரிய சரக்கு கப்பல்கள் மூலம் எண்ணெய் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு வரை இந்தியா வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கியது. வெனிசுலாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதார தடைகளை விதித்ததால் இந்தியா வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. அதே வேளையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் சென்றன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications