வெனிஸ்: 61 வயதான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆடம்பரமான முறையில் தனது காதலியும் முன்னாள் செய்தியாளருமான 55 வயது லாரன் சான்செஸை திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் மிக ஆடம்பரமான முறையில் வெனிஸ் நகரத்தில் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸும், முன்னாள் செய்தியாளர் சான்சேஸும் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்களின் திருமண நிகழ்வு மிக ஆடம்பரமாக நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் எந்த நகரத்தில் திருமணம் நடைபெறும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் வெனிஸ் நகரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெனிஸ் நகர அதிகாரிகளே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி ஜூன் 24 , 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு ஜெஃப் பெசோஸ் மற்றும் சான்சேஸின் திருமண நிகழ்வு ஆடம்பரமான முறையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிகழ்விற்காக நூற்றுக்கணக்கான பிரபலங்கள் வெனிஸ் நகரத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய இவர்களின் திருமணம் காரணமாக வெனிஸ் நகர மக்களுக்கோ அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என வெனிஸ் நகர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கொரு என்ற ஆடம்பர சொகுசு கப்பலில் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. வெனிஸ் நகர மேயர் இந்த திருமண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சமூகமாக நடைபெறுவதையும் இதனால் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தங்களுடைய நிர்வாகம் பல்வேறு பணிகளை கையில் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வுக்காக 200 விருந்தினர்கள் வருகை தருவார்கள் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச அளவிலான பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவம் கொண்டிருப்பதால் இந்த திருமண நிகழ்வையும் நாங்கள் சிறப்பாக நடத்தி முடிப்போம் என வெனிஸ் மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெனிஸ் நகரத்தில் ஜி 20 , ஜி 7 நாடுகளின் மாநாடுகள் மற்றும் பல்வேறு விஐபிக்களின் திருமண நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வெனிஸ் நகரத்தில் இருக்கும் பல்வேறு ஆடம்பர தங்கும் விடுதிகளிலும் ஜூன் மாதத்திற்காக ஏற்கனவே அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெஃப் பெசோஸும், லாரன் சான்சேஸும் 2019 ஆம் ஆண்டிலிருந்து காதலர்களாக இருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் திருமண நிச்சயம் செய்து கொண்டனர். வரும் ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. பல்வேறு பிரபலங்களுக்கும் இவர்கள் திருமண அழைப்பிதழை அனுப்பி வண்ணம் இருக்கின்றனர். அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications