MK Stalin meets Elon Musk: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை கொண்டு உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்களிடம் முதலீட்டை ஈர்த்து வருகிறது முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் முதல்வர் தற்போது அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் வேளையில் GOAT திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு டிவிட்டரில் செய்த ஒரு டிவீட் தற்போது டிரெண்டாகி வருகிறது.
400 கோடி ரூபாய் முதலீட்டில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் GOAT திரைப்படம் நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் வேளையில், விஜய் ரசிகர்கள் எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட வேண்டும் என்பதற்காக டிக்கெட் வாங்க போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் GOAT படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனக்கே உரிய பாணியில் மிகவும் வித்தியாசமாக டிவிட்டரில் GOAT படத்தை ப்ரோமோஷன் செய்துள்ளார். இவருடைய டிவிட்டர் பதிவு வெறும் 2 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தற்போது அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் வேளையில், கடந்த ஒரு வாரமாகப் பல தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இதை மையமாக வைத்து வெங்கட் பிரபு தனது டிவிட்டரில் முக ஸ்டாலின் மற்றும் எலான் மஸ்க் டெஸ்லா தொழிற்சாலையில் சந்திப்பது போல் AI மூலம் போட்டோ உருவாக்கிப் பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போட்டோ நிஜமாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. டெஸ்லா தமிழ்நாட்டுக்கு வருமே ஆனால் முதல்வர் ஸ்டாலினின் GOAT மூவ் ஆக இது இருக்கும் என GOAT பட இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இதோடு #CMStalinInUSA என்ற ஹேஷ்டேக் உடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அண்ணா என்றும், அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்களைச் சார் என்று அழைத்து இப்பதிவில் டேக் செய்துள்ளார்.
சந்தையில் நடக்கும் நிகழ்வை அடிப்படையாக வைத்து ப்ரோமோஷன் செய்வது கார்ப்ரேட் உலகில் எப்போதும் நடக்கும் ஒரு விஷயம், ஆனால் திரைப்படத்திற்கான ப்ரோமோஷனும் இந்த பாணியில் வந்துள்ளது கவனிக்கவைத்த மாற்றமாகும். வெங்கட் பிரபு-வின் இந்த முயற்சி உண்மையிலேயே ரசிக்கத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications