அமெரிக்காவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ்-க்கு தொடர்ந்து நஷ்டத்தை அளிக்கும் யாஹூ, Aol போன்ற முக்கிய வர்த்தகப் பிரிவு அடங்கிய வெரிசோன் மீடியா பிரிவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது நிலையில், இப்பிரிவை ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளது.
சர்வதேச டிஜிட்டல் மீடியா மற்றும் விளம்பர சேவைகளில் பேஸ்புக், கூகுள் ஆகியவை அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் தனது மீடியா பிரிவை மேம்படுத்த முடியாமல் தவித்து வரும் காரணத்தால் விற்பனை செய்யும் முடிவில் இறங்கியுள்ளது.
வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ்
வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீடியா வர்த்தகத்தில் இருந்து யாஹூ மற்றும் Aol பிரிவுகளைத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்குச் சுமார் 5 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
90 சதவீத பங்குகள் விற்பனை
தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தத்தின் படி வெரிசோன் நிறுவனம் இவ்விரு நிறுவன பிரிவுகளின் 90 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்பட்ட 5 பில்லியன் டாலர் தொகையில் 4.25 பில்லியன் டாலர் தொகையைப் பணமாகப் பெற உள்ளது.
10 சதவீத பங்குகள் இருப்பு
வெரிசோன் யாஹூ மற்றும் Aol பிரிவில் 10 சதவீத பங்குகளை வைத்திருப்பது மட்டும் அல்லாமல் புதிதாக உருவாக்கப்படும் நிறுவனத்தில் சுமார் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான additional preferred பங்குகளையும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம்
டிஜிட்டல் மீடியா வர்த்தகத்தில் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது யாஹூ மற்றும் Aol தளத்தில் இருக்கும் 900 மில்லியன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வருமானம் பெறுவது தான் அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
டெலிகாம் மற்றும் இண்டர்நெட் வர்த்தகம்
வெரிசோன் கம்யூனிகேஷன் தனது மீடியா வர்த்தகத்தில் அதிகம் நஷ்டம் அளிக்கும் பிரிவுகளை விற்பனை செய்வது மூலம் தனது கோர் மொபைல் மற்றும் இண்டர்நெட் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும்.
வெரிசோன் மீடியா
வெரிசோன் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீடியா வர்த்தகப் பிரிவில் யாஹூ, Aol மட்டும் அல்லாமல் டெக் கிரன்ச், யாஹூ பைனான்ஸ், என்கேட்ஜெட் ஆகியவையும் அடங்கியுள்ளது. இதையும் சேர்த்து தான் அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் கைப்பற்ற உள்ளது.
மீடியா வர்த்தகம் சரிவு
வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் 2015ல் AOL நிறுவனத்தின் 4.4 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது, இதன் பின் 2 வருட இடைவேளையில் யாஹூ நிறுவனத்தை 4.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. சமீபத்தில் வெரிசோன் தனது பிற மீடியா வர்த்தகமான Tumblr மற்றும் Yahoo Answers ஆகியவற்றை விற்பனை செய்தது.
குரு கௌரப்பன்
மேலும் தற்போது வெரிசோன் மீடியா பிரிவின் தலைவராக இருக்கும் தமிழரான குரு கௌரப்பன் தான் அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனம் உருவாக்கும் புதிய நிறுவனத்தின் தலைவராகத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது. குரு கௌரப்பன் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர்.


Click it and Unblock the Notifications