டெல்லி: இந்தியாவில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மக்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று பெற வேண்டிய சேவைகளை குறைத்துவிட்டன. இருந்தாலும் சில பணிகளுக்கு நாம் நேரில் சென்று தான் ஆக வேண்டி இருக்கிறது.
வங்கி சேவைகள்: வங்கி விடுமுறையாகட்டும் அல்லது வங்கி சேவை சார்ந்த எந்த ஒரு மாற்றமும் நேரடியாகவே சாமானிய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளும் வேலைநாட்களாக இருக்கின்றன. ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை என்ற முறை பின்பற்றப்படுகிறது.

2ஆவது &4ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை: இது தவிர அரசு விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. நீண்ட காலமாகவே தங்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் . அனைத்து இந்திய வங்கி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தங்களுடைய பரிந்துரைகளை அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.
மத்திய அரசுக்கு பரிந்துரை: அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள பரிந்துரையில் வங்கிகளின் செயல் திறனையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்தவும் , வங்கிகளின் வளர்ச்சி அதிகரிக்கவும் சிறந்த பணி சூழலை உருவாக்கவும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

5 நாட்கள் வேலை முறை: உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் ஐந்து நாட்கள் வேலை என்ற நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது, இது உற்பத்தி திறனை மேம்படுத்தி இருக்கிறது, செயல் திறனை அதிகரித்திருக்கிறது, வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தங்களை குறைத்து வளர்ச்சியை தந்து இருக்கிறது என அந்த பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர் பணியில் இருப்பவர்கள் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை செய்கிறார்கள் ,மாநில அரசுகளிலும் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகிறது, ஆர்பிஐ, எல்ஐசி, நீதிமன்றங்கள் ,பங்குச்சந்தைகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக கொண்டிருக்கும் போது வங்கி ஊழியர்கள் மட்டும் ஏன் இந்த பாகுபாடு என கேட்டுள்ளனர்.
அழுத்தம் நிறைந்த வங்கி பணி: தற்போது டிஜிட்டல் சேவைகள் வளர்ந்து விட்ட காரணத்தால் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பல்வேறு தொழிலாளர் அமைப்புகளிடமும் இந்த கோரிக்கை தொடர்பாக கையெழுத்து பெற்று அரசுக்கு வழங்கி இருக்கிறது. வங்கி துறை அதிக அழுத்தம் கொண்ட ஒரு துறையாக இருக்கிறது, வங்கி பணியில் சிறு மனித தவறு கூட பெரிய பிரச்சினைகளுக்கு வித்திடும் என்பதால் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மக்களவையில் அரசு பதில்: இது தொடர்பாக மக்களவையில் பேசிய எம்பி கே.சி .வேணுகோபால் வங்கிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்பது நடைமுறைக்கு வருமா என கேள்வி எழுப்பினார், மேலும் காலி பணியிடங்களை நிரப்பும் திட்டம் உள்ளதா என வினவினார். இதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம் வங்கி ஊழியர்கள் அமைப்பு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை எங்களிடம் தாக்கல் செய்திருக்கிறது, ஆனால் தற்போதைக்கு அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதனை பரிசீலனை செய்து வருகிறோம் என கூறியுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் தற்போது தேவையான ஊழியர்களில் 96 சதவீதம் பேர் ஏற்கனவே பணியில் இருக்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications