சென்னை: சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்கள் மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளாக செயல்படுகின்றன. வேலைக்கு செல்பவர்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இந்த மூன்று வகையான போக்குவரத்து வசதிகளையுமே பயன்படுத்துகின்றனர்.
தற்போது இந்த மூன்று போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்துவதற்கு மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டி இருக்கிறது. இதனை மாற்றக்கூடிய வகையில் சென்னை மக்கள் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இதற்கென தனியாக ஒரு செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் "அண்ணா ரைடு புக்கிங்" என்ற பெயரில் ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது.

தற்போது இந்த செயலியின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் இந்த ஒருங்கிணைந்த டிக்கெட்டுக்கான செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . மக்கள் இந்த செயலி வாயிலாக மக்கள் ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொண்டால் போதும் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்யலாம்.
உதாரணமாக அசோக் நகரில் இருக்கும் ஒரு நபர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அண்ணா ரைடு புக்கிங் செயலியில் அதனை உள்ளீடு செய்தால் போதும். அசோக்நகரில் இருந்து எந்தெந்த போக்குவரத்து முறைகளை பயன்படுத்தி விமான நிலையம் செல்லலாம் என்பது காட்டும். நீங்கள் பயணம், செய்யும் நேரத்தை வழங்கினால் அந்த சமயத்தில் பேருந்து , மெட்ரோ உள்ளிட்ட எந்த சேவை கிடைக்கும் என காண்பிக்கும்.
அதில் பேருந்து , மெட்ரோ என இரண்டையும் நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் அதனை உள்ளிட்டு உரிய க்ட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தினால் கியூஆர் கோடு கொண்ட டிக்கெட் வந்துவிடும். இதனை காண்பித்து நீங்கள் பயணம் செய்து கொள்ளலாம். மெட்ரோ அல்லது பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவை இல்லை. இந்த செயலி வாயிலாக நம்ம யாத்திரி கார்கள் மற்றும் ஆட்டோக்களிலும் நாம் ரைடுகளை புக் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல் கட்டமாக இந்த செயலில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் டிக்கெட் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்திற்கு பின் மின்சார ரயில் டிக்கெட் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர் . சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் இந்த செயலியை பரிசோதனை செய்து மக்களுக்கு நிகழ் நேர ட்ராக்கிங் உள்ளிட்டவை காட்டப்படுகிறதா என ஆய்வு செய்கின்றனர்.
மக்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கான போக்குவரத்து முறைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது அவர்களின் பயணத்தை இன்னும் எளிமையாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய நேரத்திற்கு அவர்களால் உரிய நேரத்தில் செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications