சென்னை: சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் நிலையில் கூடிய விரைவில் புறநகர் மின்சார ரயிலில் ஏசி பெட்டிகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிடி நெஸ்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் ரயில்வேத்துறை மேலதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் பல ஆண்டுகளாக புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம் கும்மிடிப்பூண்டி வரையிலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர்.
புறநகர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் சென்னை நகருக்குள் வேலைக்கும் கல்விக்காகவும் வந்து செல்வதற்கு இந்த ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக இதில் ரயில் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற குறைந்த அளவிலேயே வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய பாதையில் ஏசி ரயில் பெட்டிகள் இயக்கப்பட உள்ளன.
இதனை ஐசிஎப் எனப்படும் இன்டெகரல் கோச் ஃபேக்டரி தான் தயார் செய்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்கு முன்னரே தென்னக ரயில்வே இடம் இந்த ஏசி ரயில் பெட்டிகள் ஒப்படைக்கப்படும் என இந்த தொழிற்சாலையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஏசி ரயில் பெட்டிகள் இயக்கப்படும்போது அவற்றின் கட்டணம் எந்த அளவில் இருக்கும் என்ற தகவலையும் டிடி நெக்ஸ்ட் செய்தியில் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி முதல் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு புறநகர் ரயிலில் ஏசி பட்டியில் பயணம் செய்வதற்கு 29 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுமாம். 11 முதல் 15 கிலோமீட்டர் தொலைவிலான பயணத்திற்கு 37 ரூபாயும், 16 இல் இருந்து 25 கிலோமீட்டர் வரையிலான தொலைவிற்கு 56 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீசன் டிக்கெட்டுகளுக்கான விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
மாதம் மற்றும் வார சீசன் டிக்கெட்டுகளை பொறுத்து 10 கிலோமீட்டர் வரை பயணம் செய்பவர்களுக்கு 295, 445 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில் கட்டணம் தற்போது மெட்ரோ ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது என்ற கருத்து எழுந்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில் குறைந்தபட்ச கட்டணமாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகளில் குறைந்தபட்ச கட்டணமாக 29 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications