ஈ-காமர்ஸை தொடர்ந்து லாபம் கொட்டும் புதிய பிரிவில் கால் பதிக்கும் Amazon, Flipkart!!

இந்தியர்கள் மத்தியில் நுகர்வு போக்கு பலமடங்கு அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அதற்காக பணத்தை சேமித்துவிட்டு தான் வாங்குவார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாகிவிட்டது. அனைத்திற்குமே நமக்கு கடன் கிடைக்கிறது.நமக்கு பிடித்த போன் வாங்க வேண்டும், பைக் வாங்க வேண்டும், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அதற்கு முழு தொகையும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

ஈஎம்ஐ வசதி பெரும் வரபிரசாதமாக மாறி விட்டது. அந்த வகையில் இந்தியாவின் கடன் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக இருக்கிறது. இதில் பாரம்பரியமாக வங்கிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன . இந்தியாவில் பெர்சனல் லோன், கிரெடிட் கார்டுகள், நுகர்வோர் பொருட்களுக்கான கடன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நுகர்வோர் கடன் சந்தை என்பது 2020 ஆம் ஆண்டு 80 பில்லியன் டாலர்களாக இருந்தது 2025இல் அது 212 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது .அண்மைக்காலமாக ஃபின்டெக் நிறுவனங்கள் படிப்படியாக இந்த கடன் சந்தையில் நுழைந்த வண்ணம் இருக்கின்றன.

ஈ-காமர்ஸை தொடர்ந்து லாபம் கொட்டும் புதிய பிரிவில் கால் பதிக்கும் Amazon, Flipkart!!

தற்போது ஈ-காமர்ஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களும் இந்திய கடன் சந்தையில் கால் பதிக்க உள்ளன. அமேசான் நிறுவனம் பெங்களூருவை சேர்ந்த வங்கி சாராத கடன் வழங்கும் நிறுவனமான ஆக்சியோவை அண்மையில் தான் கைப்பற்றியது. தற்போதைக்கு ஆக்சியோ நிறுவனம் buy now pay later வகையிலான கடன்களில் கவனம் செலுத்துகிறது. அதேபோல பெர்சனல் லோன்களையும் வழங்குகிறது.

அமேசான் நிறுவனம் கூடிய விரைவில் ஆக்சியோவை சிறு தொழில்களுக்கு கடன் வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக மாற்ற இருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் பேமெண்ட் பிரிவுக்கான துணைத் தலைவர் மகேந்திரா இந்தியாவில் கடன் சந்தை வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது , அதில் நிச்சயம் எங்களுக்கு பெரிய வளர்ச்சி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான தேவை அதிகரித்து இருப்பதால் இந்த துறையில் நாங்கள் கால் பதிக்கிறோம் என கூறி இருக்கிறார்.

அமேசான் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கக்கூடிய சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டங்களையும், டிஜிட்டல் ரீதியிலான கடன் வழங்கும் முறைகளையும் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே ஃபிளிப்கார்ட் பைனான்ஸ் என்ற ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக ஃபிளிப்கார்ட் பைனான்ஸ் காத்திருக்கிறது .

ரிசர்வ் வங்கி அனுமதி கிடைத்தவுடன் இரண்டு விதமான கடன்களை இது வழங்க இருக்கிறது. ஒன்று நோ காஸ்ட் இஎம்ஐ கடன்கள் மற்றும் கன்சியூமர் டியூரபில் கடன்கள். அமேசான், பிளிப்கார்ட் இரண்டுமே இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. இங்கே பொருட்களை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் அதற்கான ஈஎம்ஐ உள்ளிட்டவற்றுக்கு மூன்றாவது நிறுவனத்தையோ வங்கியையோ சாராமல் அந்த சேவையையும் தாங்களே வழங்கினால் என்ன என்பது தான் இந்த நிறுவனங்களின் இந்த முயற்சிக்கு காரணம். கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகள் நிச்சயம் அமேசான் , பிளிப்கார்ட்டுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+