கூடிய விரைவில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) பைக்குகளின் விலை குறைய இருக்கிறது. இந்தியாவில் அதிக என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தங்களின் இருசக்கரவாகனங்களை இறக்குமதி செய்து ஹீரோ மோட்டார் நிறுவனம் மூலம் விற்பனை செய்கிறது. இருந்தாலும் இதன் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் இவற்றை வாங்க முன்வருவதில்லை. இறக்குமதி செய்து விற்கப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு 750சிசி மற்றும் அதற்கு மேல் என்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான இறக்குமதி வரியை நீக்க திட்டமிட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு 750 சிசிக்கும் அதிகமான பைக்குளின் இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை ஆகும் அதிக என்ஜின் திறன் கொண்ட மோட்டார் பைக்குகளின் விலை குறையும். இதன்படி ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளின் விலை இந்தியாவில் சரிவடையும் என சொல்லப்படுகிறது.
2020 ஆம் ஆண்டிலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது. ஏனெனில் அவற்றின் பைக்குளின் விலை அதிகமாக இருப்பதால் மக்களிடையே பெருமளவில் வரவேற்பு இல்லை. வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விலை தான் பிரச்சினையாக இருந்தது. தற்போதைக்கு இந்தியாவில் ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சனின் எக்ஸ்440 வாகனத்தை உற்பத்தி விற்பனை செய்து வருகிறது.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்த வாகனத்தின் என்ஜின் திறன் 400 சிசி. கடந்த ஓராண்டில் ஹீரோ மோட்டார் நிறுவனம் 11,000க்கும் அதிகமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எக்ஸ்400 ரக வாகனத்தை வாகனத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இந்த வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை 2.39 லட்சம் ஆக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை விதித்திருந்தார். இதனை அடுத்து மூன்று மாத காலத்திற்கு அந்த வரி விதிப்பை தள்ளி வைத்திருக்கிறார். இந்த சூழலில் அமெரிக்காவுடன் மத்திய அரசு சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு அமெரிக்க நிறுவனங்களின் குறிப்பிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகள் வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது.
750 சிசி மற்றும் அதற்கு மேல் என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரியை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதே அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்து தங்களுடைய வாகனத்தை விற்பனை செய்வதற்கு சாதகமாக தான் கொண்டு வரப்படுகிறது என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இதுபோல அதிக என்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் விற்பனை என்பது மொத்த வாகன விற்பனையில் சொற்பமாக தான் இருக்கிறது. எனவே இந்த இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்குவதன் மூலம் உள்நாட்டு இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது 500 லிருந்து 800சிசி வரையிலான இருசக்கர வாகனப் பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் அதிகம் செலுத்துகிறது. இந்திய சந்தையில் விற்பனையாகும் அதிக எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் 95 சதவீதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகனங்களாக தான் இருக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications