சென்னை: அண்மைக்காலமாக கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக மதிப்பீட்டு முகமையான ஐசிஆர்ஏ (rating agency Icra) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 74 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது. இது கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒரு பேரல் 84 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. அதை விட தற்போது 10 டாலர்கள் குறைந்துள்ளது. ஏன் மார்ச் மாத விலை நிலவரத்தை குறிப்பிடுகிறோம் என்றால் அப்போது தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 74 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்திருப்பதால் 1 லிட்டர் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தற்போது இருப்பதைப் போலவே குறைந்த அளவிலேயே இருக்கிறது எனும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் அவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐசிஆர்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
ஐசிஆர்ஏ நிறுவனத்தின் மூத்த தலைவரான கிரிஷ் குமார் காடம் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை என்பது மார்ச் 15க்கு பிறகு மாற்றமடையாமல் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. இதற்கு சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்காவில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி உள்ளிட்டவையே காரணமாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் எண்ணெய் நிறுவனங்களிடமே இருக்கிறது.
அந்த வகையில் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பெருமளவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. அதற்கு முன்பு வரை தினம் தோறும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருந்தது . அது தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் அங்கே பெட்ரோல் டீசல் தேவை குறைந்து இருப்பதாகவும் , இவற்றின் சில்லறை விற்பனை சரிந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே எண்ணெய் நிறுவனங்களின் முக்கியமான சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் பெட்ரோலியம் பொருட்களின் பயன்பாடு கடந்த ஓராண்டு காலத்தில் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது இது அடுத்த ஆண்டில் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 306 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. தற்போது இது 256.8 மில்லியன் டன்களாக இருக்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications