சென்னை: டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பல்வேறு சேவைகளையும் நாம் பெறக்கூடிய விதத்தையே மாற்றி அமைத்து விட்டன. முன்பெல்லாம் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் நாம் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது . டிஜிட்டல் வளர்ச்சியின் மூலம் நாம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய செல்போன் வாயிலாகவே பல்வேறு சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடிகிறது .
வாட்ஸ் அப்பில் அரசு சேவைகள்: தமிழ்நாடு அரசு தன்னுடைய சேவைகளை மேலும் டிஜிட்டல்மயமாக்கும் வகையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , மெட்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தக பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

வாட்ஸ் அப்புடன் அரசு ஒப்பந்தம்: தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாக வழங்குவதற்கு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. படிப்படியாக இந்த வாட்ஸ் அப் சேவை 1000க்கும் அதிகமான சேவைகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ் அப் வழியாகவே தமிழ்நாடு மக்கள் இனி ரேஷன் கார்டு விண்ணப்பம், பிறப்பு மற்றும் வருமான சான்றிதழ்கள், வரி செலுத்துவது, வணிக உரிமங்களை பெறுவது, மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது என 50 அரசு சேவைகள் வரை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு கிளிக்கில் முடியும் வேலை: தமிழ்நாடு அரசு ஏஐ அடிப்படையிலான சேட் பாட் ஒன்றினை உருவாக்கி இருக்கிறது. தற்போது மெட்டாவிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் மேற்பட்டிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாம் நம்முடைய வாட்ஸ் அப் வாயிலாகவே ஒரு படிவத்தை விண்ணப்பம் செய்து , பூர்த்தி செய்து அனுப்புவது ,ஆவணங்களை பதிவேற்றம் செய்வது, நமக்கு தேவையான சான்றிதழ்களை டவுன்லோட் செய்வது என அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் . மின்சார கட்டணம், வரி உள்ளிட்டவற்றையும் ஒரு கிளிக்கிலேயே முடித்து கொள்ளலாம்.

ஏஐ மூலம் உருவாக்கம்: தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இயங்கும் வகையில் சேட்பாட் என்பது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களில் இது பயன்பாட்டுக்கு வந்து விடும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இ சேவை மையங்களில் கிடைக்கும் பெரும்பாலான சேவைகள் வாட்ஸ் அப் தளத்திலேயே கிடைக்கும் வகையிலும் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது.
ரேஷன் கார்டு முதல் டிக்கெட் வரை: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது, முகவரி மாற்றம், உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது , பிறப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய இனி வாட்ஸ் அப்பே போதும். நீர் மற்றும் சொத்து வரி செலுத்துவது ,மின்கட்டணம் செலுத்துவது , சொத்து பதிவுக்கான வழிகாட்டு மதிப்புகளை அறிவது , அரசு பேருந்து முன்பதிவு, தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய பகுதிகளுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இதன் மூலம் பெற முடியும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications