யூபிஐ முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது நாடு முழுவதும் எளிமையானதாக மாறியிருக்கிறது. நாம் எங்கு சென்றாலும் நம்முடைய மொபைல் போனில் ஒரு கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து வங்கி கணக்கில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். ஒரு மொபைல் எண்ணை உள்ளீடு செய்தாலே யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பி விடலாம். அந்த அளவுக்கு யூபிஐ மூலம் பணம் அனுப்புவது மிக எளிமையானதாக மாறி இருக்கிறது.
யூபிஐயில் மேலும் ஒரு புதிய வசதி கொண்டுவரப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகள் நிதி நிறுவனங்கள் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய கடன் தொகைகளை நாம் யூபிஐ வழியாக தேவைக்கேற்ப எடுத்து செலவழிக்கும் வகையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . என்பிசிஐ எனப்படும் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் தான் இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்து வருகிறது.

இப்போது நாம் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கூகுள் பே ,போன் பே, அமேசான் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் வாயிலாக பரிவர்த்தனை செய்யும் வசதி நடைமுறையில் இருக்கிறது. கூடிய விரைவில் நாம் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்டவற்றை பெற விண்ணப்பம் செய்யும்போது நமக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை யூபிஐ வாயிலாக பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக நாம் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது அந்த மொத்த தொகையும் நமக்கு ஒரே நேரத்தில் கணக்கில் வந்துவிடும். ஆனால் அந்த மொத்த தொகையும் ஒரே நேரத்தில் தேவைப்படாமல் போகலாம். ஆனால் இந்த புதிய வசதி மூலம் நம் கடன் கணக்கு தொகையானது யூபிஐ உடன் இணைக்கப்பட்டு விடும். நாம் தேவைக்கேற்ப யூபிஐ கணக்கில் இருக்கும் பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இதற்கு வட்டி எப்படி கணக்கிடப்படும் என்பதை வங்கிகளே அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
நம் கடன் கணக்கை யூபிஐ உடன் இணைத்துவிட்டால் வழக்கமான சேமிப்பு கணக்கிலிருந்து எப்படி நாம் பணம் எடுத்து செலவு செய்கிறோமோ அதேபோலவே கடன் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்து விட முடியும். இது தொடர்பாக என்பிசிஐ அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது . ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இது தொடர்பான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு யூபிஐ வாயிலாக நம் கடன் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் நடைமுறை பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
சொத்துக்கள் மீது கடன் வாங்குவது , தனிநபர் கடன், மியூச்சுவல் ஃபண்டுகள் மீது கடன் வாங்குவது, பத்திரங்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் உள்ளிட்டவற்றின் மீது பெறும் கடன்கள் ஆகிய அனைத்தும் யூபிஐ உடன் இணைக்கப்பட இருப்பதாக என்பிசிஐ தெரிவிக்கிறது. ஆனால் அந்த கடன் எந்த நோக்கத்திற்காக வாங்கப்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை வங்கிகள் கண்காணிக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications