இந்தியாவில் யுபிஐ முறையில் பணப் பரிமாற்றங்கள் என்பது மிக எளிமையானதாக மாறிவிட்டது. ஒரு கியூ ஆர் கோட் அல்லது ஒரு செல்போன் நம்பரை உள்ளீடு செய்தாலே நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பிவிடலாம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பணம் பணப்பரிமாற்றத்தையே மிகவும் எளிமையாகிவிட்டன.
இந்தியாவில் யுபிஐ பரிமாற்றம் என்பது மூலை முடுக்கெங்கும் பரவி இருக்கிறது , அனைத்து தரப்பினருக்கும் இந்த தொழில்நுட்பம் சென்று சேர்ந்து இருக்கிறது . இந்த சூழலில் யுபிஐ பரிமாற்றத்தில் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதற்கு நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி கூடிய விரைவில் நாம் பின் நம்பரை உள்ளீடு செய்யாமலேயே நம்முடைய பயோமெட்ரிக் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். எக்கனாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது நாம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் நம்முடைய ஃபோனில் யுபிஐ செயலியை எடுத்து அதில் இருக்கும் ஸ்கேனரை கொண்டு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது நாம் பணம் அனுப்ப வேண்டிய நபரின் மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி உள்ளீடு செய்ய வேண்டும். இதன் பிறகு எவ்வளவு தொகையோ அதனை நிரப்பி நாம் நம்முடைய 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை உள்ளிட வேண்டும். அப்படி தான் பணப்பரிமாற்றம் நடக்கும்.
இனிவரும் நாட்களில் பின் நம்பருக்கு மாற்றாக நம்முடைய பயோமெட்ரிக் விவரங்களான கைரேகை அல்லது கருவிழி அல்லது ஃபேஸ் ஐடி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு அங்கீகரித்தாலே பணப்பரிமாற்றம் நடக்கும். இதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக என்பிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பணப்பரிமாற்றங்கள் வேகமாக நடக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் பின் நம்பர் அடிப்படையில் நடக்கக்கூடிய மோசடிகள் தடுக்கப்படும் என என்பிசிஐ கூறுகிறது.

இந்தியாவில் யுபிஐ அடிப்படையிலான நிதி மோசடிகள் அதிகரித்து வருவதை அடுத்து அதனை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பிசிஐ. அதன் ஒரு பகுதிதான் பயோமெட்ரிக் விவரங்களைக் கொண்டு பணப்பரிமாற்றம் நடத்துவது. பின் நம்பரை எளிதாக ஹேக் செய்து எடுத்து விட முடியும் ஆனால் பயோமெட்ரிக் விவரங்கள் ஒரு தனிநபருடையது என்பதால் அதனை கொண்டு மோசடி செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது யுபிஐ இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும் என நம்பப்படுகிறது. எனவே நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் கியூஆர்கோடு, அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு பின் நம்பருக்கு பதிலாக கை விரல் ரேகை அல்லது ஃபேஸ் ஐடி கொண்டு அங்கீகரித்துவிடலாம். அவர்களுக்கு பணம் சென்றுவிடும். ஆனால் இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தரவுகளான பயோமெட்ரிக் விவரங்கள் கசிந்து விடாத வகையில் மிகச்சிறந்த தரவு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் .


Click it and Unblock the Notifications