சென்னை: அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது சுங்கச்சாவடி கட்டணங்கள். இதற்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளது.
ஓராண்டுக்கான மற்றும் 15 ஆண்டுகளுக்கான டோல் பாஸ்களை அறிமுகம் செய்ய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. தனிநபர் வாகனங்கள் அடிக்கடி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டால் இந்த டோல் பாஸ்கள் பெருமளவில் பயனுள்ளதாக இருக்கும். தனிநபர் வாகனங்கள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் எளிதாக செல்லும் வசதியை இது கொண்டு வரும்.

நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வரக்கூடிய மக்கள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தினாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அடிக்கடி சுங்கச்சாவடிகளை பயன்படுத்துபவர்களுக்காக சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை தான் மத்திய அரசு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஓராண்டுக்கு மற்றும் 15 ஆண்டுகளுக்கு என்ற அடிப்படையில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இதற்கான இறுதி முன்வடிவை தயாரித்துள்ளது.
இந்த புதிய அமைப்பின்படி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும் . ஒன்று ஒரு ஆண்டுக்கான டோல் பாஸ், இதற்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டால் அடுத்த ஓராண்டு காலத்திற்கு அவர்கள் நாட்டின் எந்த ஒரு தேசிய நெடுஞ்சாலையிலும் எக்ஸ்பிரஸ்வேயிலும் இருக்கும் சுங்கச்சாவடிகளில் இலவசமாக பயணம் செய்ய முடியும்.
அடுத்ததாக லைஃப் டைம் டோல் பாஸ், 15 ஆண்டுகளுக்கான இந்த பாஸ் பெற 30,000 ரூபாயை ஒரு முறை கட்டணமாக செலுத்தி விட்டால் போதும். அடுத்த 15 ஆண்டு காலத்திற்கு எந்த சுங்கச்சாவடியிலும் இவர்கள் எளிதாக பயணம் செய்து கொள்ள முடியும். தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்டேக் அமைப்பின் கீழ் இது ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. எனவே இதற்காக அரசு கூடுதலாக கருவிகளை பொருத்த வேண்டும் என்ற தேவை இருக்காது. எனவே கூடுதல் செலவினம் செய்ய வேண்டாம்.
தற்போதும் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. இது ஒரு மாதத்திற்கு 340 ரூபாய் என்ற கட்டணத்தில் கிடைக்கும். இந்த பாஸை அடிக்கடி ஒரே சுங்கச்சாவடியை கடப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அந்த ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே இது செல்லுபடியாகும். ஆனால் புதிய நடைமுறையில் ஓராண்டுக்கே 3,000 ரூபாய் தான் கட்டணம், மேலும் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடிக்கும் செல்லலாம்.
இந்த புதிய டோல் பாஸ் நடைமுறை தனியார் வாகன ஓட்டிகள் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய அளவில் பணத்தை சேமிக்க உதவி செய்யும். தற்போதைக்கு நாட்டில் சுங்கச்சாவடிகள் வருவாயில் 26 சதவீதம் தனியார் வாகன ஓட்டிகளிடம் இருந்துதான் கிடைக்கிறது. இவர்கள் தான் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படவும் காரணமாக இருக்கிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கவும் அடிக்கடி சுங்கச்சாவடிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பவர்களுக்கு சலுகை தரும் வகையிலும் தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த இருக்கிறது. மேலும் பயணம் செய்யும் கிலோமீட்டர் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தினால் போதும் என்று ஒரு திட்டத்தையும் அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications