இந்தியாவில் யுபிஐ முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. நம்முடைய கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் யுபிஐ செயலிகளை கொண்டு நாம் எளிதாக பணப்பரிமாற்றம் செய்து விட முடிகிறது.
இந்த யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் பல்வேறு மோசடிகளும் நடக்கின்றன . இத்தகைய மோசடிகளை தடுக்க கூடிய வகையில் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை கண்காணிக்க கூடிய என்பிசிஐ அமைப்பு பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகார முறையை அக்டோபர் 8ஆம் தேதி முதலே நடைமுறைப்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பொதுவாக நாம் யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது அந்த குறிப்பிட்ட யுபிஐ செயலியை ஓபன் செய்ய வேண்டும் qr கோடு ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது போன் நம்பரை உள்ளீடு செய்து எவ்வளவு தொகை என்பதை நிரப்பிவிட்டு, PIN நம்பரை உள்ளிடுவோம். இதில் கூடுதலாக சில பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருக்கிறார்கள்.
இதன்படி நாம் பின் நம்பரை உள்ளிட தேவை இல்லை அதற்கு மாற்றாக நம்முடைய பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டே பணம் அனுப்புவதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியும். இதை தான் அக்டோபர் எட்டாம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை தீவிர படுத்தியிருக்கிறது. நாம் இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஆதார் அமைப்பில் சேகரிக்கப்பட்டு வைத்திருக்கும் நம்முடைய பயோமெட்ரிக் தரவுகளை அங்கீகார சரிபார்ப்புக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
எனவே இனி நீங்கள் பணம் அனுப்பும்போது பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் கிடையாது அதற்கு மாற்றாக உங்களுடைய முக அடையாளத்தை கொண்டு பணம் பரிமாற்றம் செய்வதற்கான அங்கீகாரத்தை நம்மால் வழங்க முடியும், அல்லது கைவிரல் ரேகை மூலம் வழங்கலாம்.
அண்மையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனையை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தான் யுபிஐ பணப்பரிவர்த்தனையில் பின் நம்பரோடு முக அடையாளம் மற்றும் கைரேகை போன்றவற்றைக் கொண்டும் பரிவர்த்தனையை அங்கீகரிக்க கூடிய நடைமுறையை கொண்டு வர என்பிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இந்த புதிய பயோமெட்ரிக் வசதி எப்படி செயல்படும் என்பதை மும்பையில் நடைபெறக்கூடிய உலக ஃபின்டெக் விழாவில் என்பிசிஐ செய்து காட்டி இருக்கிறது. இந்தியாவில் யுபிஐ பண பரிமாற்ற முறை வேகமான வளர்ச்சியை அடையும் சூழலில் இந்த பரிவர்த்தனையை அங்கீகரிக்க பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்துவது யுபிஐ பரிவர்த்தனையை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications